மேலும் அறிய

Free Coaching: மக்களே... ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுத் தேர்வுகள்; 100 நாள் இலவச சிறப்புப் பயிற்சி- பங்கேற்பது எப்படி?

Free Coaching: நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரயில்வே, வங்கி மற்றும் எஸ்எஸ்சி ஆகிய மத்திய அரசுத் தேர்வுகளை வெல்வதற்கான சிறப்பு பயிற்சி தமிழக அரசால் தொடங்கப்பட உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரயில்வே, வங்கி மற்றும் எஸ்எஸ்சி ஆகிய மத்திய அரசுத் தேர்வுகளை வெல்வதற்கான சிறப்பு பயிற்சி தமிழக அரசால் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து  மாவட்டங்களிலும் 100 நாள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 25.05.2023 முதல் தொடங்கப்பட உள்ளன.

'நான்‌ முதல்வன்‌' திட்டமானது தமிழக முதல்வரின்‌ தொலைநோக்குத்‌ திட்டமாகும்‌. அதன்‌கீழ்‌, நான்‌ முதல்வன்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவானது மத்திய அரசின்‌ பணியாளர்‌ தேர்வாணையங்களால்‌ நடத்தப்படும்‌ போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழக இளைஞர்கள்‌ வெற்றிபெற, பயிற்சி மற்றும்‌ பிற தேவையான உதவிகளை வழங்குவதில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்துவதற்காகத்‌ தொடங்கப்பட்டது.

"ரயில்வே, வங்கி, எஸ்‌எஸ்சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு" என்பது தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ நான்‌ முதல்வன்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவால்‌ வடிவமைக்கப்பட்ட பயிற்சித்‌ திட்டமாகும்‌.

இந்தப்‌ பயிற்சித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தகுதியுடைய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவச வகுப்புகள்‌, தேர்வுகள்‌, பாடப்புத்தகங்கள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்படும்‌.

இப்பயிற்சி திட்டத்தின்‌ மூலம்‌ மத்திய அரசின்‌ வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு மாணவர்களைப்‌ பயிற்றுவிப்பதற்காக நான்‌ முதல்வன்‌ போட்டித்‌ தேர்வுகள்‌ பிரிவு தமிழகத்தின்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ 150 விண்ணப்பதாரர்களை ஏற்கின்றது . 150-க்கும்‌ மேல்‌ விண்ணப்பங்கள்‌ வரும்‌ பட்சத்தில்‌, 10- ம்‌ வகுப்பு , 12 ம்‌ வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசின்‌ கல்விக்கான இட ஒதுக்கட்டுக்‌ கொள்கையின்‌ அடிப்படையில்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌ .

குறிப்பு : தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

1. தகுதி:

குறைந்தபட்சம்‌ ஏதேனும்‌ ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்‌.

வயது எல்லை:
குறைந்தபட்சம்‌ - 21
அதிகபட்சம்‌ - 35
2. விண்ணப்பிக்கும்‌ முறை: விண்ணப்பதாரர்கள்‌ பின்வரும்‌ இணைப்பின்‌ மூலம்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.
https: //candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX

முக்கிய நாட்கள்‌

2.  ஆன்லைன்‌ விண்ணப்பம்‌ தொடங்கும்‌ தேதி: 11.05.2023

3. விண்ணப்பத்தை சமர்ப்பிபபதற்கான கடைசி தேதி: 20.05.2023

4. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்‌ பட்டியல்‌ வெளியீடு: 23.05.2023

5. பயிற்சி வகுப்பின்‌ தொடக்க தேதி: 25.05.2023

பாடத்திட்டம்‌ மற்றும்‌ பயிற்சி மைய விவரங்கள்‌ பயிற்சிக்‌ காலம்

1. பயிற்சி வகுப்புகள்‌ 25.05.2023 அன்று முதல்‌ தொடங்க உள்ளன.
2. இந்த முழுநேர பயிற்சியானது மொத்தம்‌ 100 நாட்களுக்கு நடைபெறும்‌.

வகுப்புகள்‌:

1. முழு நேர வகுப்புகள்‌ காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை நடத்தப்படும்‌. (திங்கள்‌ - வெள்ளி)
2. ஒவ்வொரு நாளும்‌ மதியம்‌ 2.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை வழிகாட்டுதல்‌ வகுப்புகள்‌ நடத்தப்படும்‌. (திங்கள்‌ - வெள்ளி)
3. வகுப்புகள்‌ மற்றும்‌ வழிகாட்டல்‌ திட்டத்தில்‌ கலந்துகொள்வது கட்டாயமாகும்‌.

தேர்வுகள்‌:

1. பிற்பகல்‌ அமர்வில்‌ பயிற்சித்‌ தேர்வுகள்‌ தினசரி அடிப்படையில்‌ நடத்தப்படும்‌.
2. வாராந்திர தேர்வுகள்‌ சனிக்கிழமைகளில்‌ நடத்தப்படும்‌.

பாடப்புத்தகங்கள்‌ :
பதிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள்‌ மற்றும்‌ பாடத்திட்டம்‌ தொடர்பான அனைத்துத் தலைப்புகளுக்கான கையேடுகளும்‌ வழங்கப்படும்‌.

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ வகுப்பறை இருக்கும்‌ இடம்‌, இறுகித்‌ தேர்வுப்‌ பட்டியலுடன்‌, அதாவது 23.05.2023 அன்று அறிவிக்கப்படும்‌.

கூடுதல் தகவல்களுக்கு: 8056258702 / 7845786117 / 7845766103
https: //www.naanmudhalvan.tn.gov.in/servicedesk/users/index.php

கூடுதல் விவரங்களுக்கு: https://naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Embed widget