மேலும் அறிய

College Assignment: அசைன்மென்ட்டுகளை எளிதாக முடிக்க வேண்டுமா? பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் ஆன்லைன் வழிகாட்டிகள் இதோ!

online resources school college assignment: ஆன்லைனில் தகவலை எடுத்து, அசைன்மென்ட்டுகளை முடிக்க அசத்தலான வழிகாட்டிகள் நிறைய இருக்கின்றன. அவை குறித்துக் காணலாம். 

அப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் அசைன்மெண்ட்டுகளை எழுத வேண்டும் எனில், படிப்பாளி நண்பர்களிடம் நோட்டுப் புத்தகத்தைக் கடன் வாங்கி எழுதுவோம். இப்போதெல்லாம் நொடி நேரத்தில், இணையம் மூலம் எந்தத் தகவலையும் எளிதாக எடுத்துப் பயன்படுத்தலாம். 

அவ்வாறு ஆன்லைனில் தகவலை எடுத்து, அசைன்மென்ட்டுகளை முடிக்க அசத்தலான வழிகாட்டிகள் நிறைய இருக்கின்றன. அவை குறித்துக் காணலாம். 

கூகுள் 

கூகுள் என்றதும், என்னடா இதுகூடத் தெரியாதா நமக்கு என்று யாரேனும் நினைக்கலாம். நம் அனைவராலும் பாரபட்சம் இல்லாமல் பயன்படுத்தப்படும் தேடுபொறியில் முக்கியமானதும் முதன்மையானதும் கூகுள் ஆகும். இதில், தேடும் முறை ( Google Search ) மிகவும் முக்கியம். 

தேடும் தளம்

எதையேனும் தேடும்போது, பொதுவாக .edu என்ற இணைப்பைச் சேர்த்து தேடினால், அது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் பதிவிடப்பட்ட தகவல்களை நமக்கு அளிக்கும். 

தேவையில்லாத தகவலைத் தவிர்ப்பது எப்படி?

- என்ற சின்னத்தைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான வார்த்தை குறித்த தகவலைத் தவிர்க்கலாம். அதாவது -வன்முறை என்ற முறையைப் பயன்படுத்தி, வன்முறை தொடர்பான செய்திகள், படங்கள் உள்ளிட்ட தகவல்களைத் தவிர்க்கலம். 

"" என்னும் இரட்டை மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தி, துல்லியமாக என்ன வார்த்தையைத் தேட வேண்டுமோ அதற்கான முடிவுகளைப் பெறலாம். குறிப்பாக "கிராமர்" என்று தேடினால், அதுதொடர்பான தகவல்கள் மட்டுமே வரும். இது புத்தகங்கள் அல்லது குறிப்பிட்ட தகவலைப் பெற உதவியாக இருக்கும். 

யூடியூப் 

பொதுவாக யூடியூப் என்றாலே துள்ளலிசை பாடல்களும் வண்ணமயமான வீடியோக்களும்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் அதைத் தாண்டியும் ஏராளமான டுட்டோரியல் கற்றல் வீடியோக்கள் இருக்கின்றன. கடினமான பாடங்களையும் எளிதில் புரியும் வகையில் வீடியோ வடிவில் கண்டு தெளியலாம். 

வாக்கிய உருவாக்க செயலிகள்

உள்ளடக்கம், தொழில்நுட்ப அளவில் நீங்கள் போதிய அறிவைக் கொண்டிருந்தாலும் அவற்றை சரியான வாக்கியமாக அமைய வேண்டியது முக்கியம். இலக்கணப் பிழைகள், செய்வினை - செயப்பாட்டு வினை மாற்றங்கள், ஒருமை - பன்மை குழப்பங்கள், வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவது, தவறான வார்த்தை பயன்பாடு ஆகியவற்றைத் தவிர்ப்பது முக்கியம். இதற்கு Grammarly,  After the Deadline மற்றும் SlickWrite உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தலாம். இவை வாக்கிய உருவாக்கத்தை இணையத்திலேயே சரிபார்த்து, பிழை இல்லாத சரியான வார்த்தைகளை அமைக்கும். இதில், Grammarly செயலி முக்கியமான ஒன்றாகும். 

College Assignment: அசைன்மென்ட்டுகளை எளிதாக முடிக்க வேண்டுமா? பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அசத்தல் ஆன்லைன் வழிகாட்டிகள் இதோ!

மொழிமாற்ற செயலிகள்

மாணவர்கள் பிற மொழிகளையும் படிக்க வேண்டிய சூழல் இருக்கும். அத்தகைய நேரத்தில் Google Translate பயன்படுத்தலாம். எனினும் அது சில நேரம் விநோதமான முடிவுகளைக் கொடுக்கும். அந்த நேரத்தில்  Word Reference உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டு மொழிகளை இவை மொழிமாற்றம் செய்து, அர்த்தம் புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 

சேமிப்பு செயலிகள்

நம்முடைய பாட உள்ளடக்கங்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து படிப்பது, இட சேமிப்பு (Storage) உள்ளிட்டவற்றில் சிக்கலை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் இணையத்திலேயே சேமித்து வைக்க Google Translate செயலியைப் பயன்படுத்தலாம். 

பட வடிவிலும் படிக்கலாம்

தொடர்ந்து படிப்பது அயர்ச்சியையும் சலிப்பையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. படிப்பது மறந்துபோகவும் வாய்ப்புண்டு. அத்தகைய நேரங்களில் படங்களின் வடிவில், Flashcards-ஐ உருவாக்கி படிக்கலாம். எனினும் நேரடியாக வீட்டில் செய்வது நேரம் எடுக்கும் என்பதால், இணையத்திலேயே ஃப்ளாஷ் கார்டுகளை உருவாக்கி, அதைக் கொண்டு படிக்கலாம். 

இவை தவிர ஏராளமான ஆன்லைன் செயலிகளும் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருக்கின்றன. அவற்றின் நம்பகத் தன்மையை உறுதிசெய்த பிறகு, தேவைக்கு ஏற்பப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget