மேலும் அறிய

Guest Lecturer Post: அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; டிச.27 கடைசி- விவரம்

அரசுக் கல்லூரிகளில்  2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைத் தெரிவு செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அரசுக் கல்லூரிகளில்  2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைத் தெரிவு செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான  கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக  முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. 

இந்த காலிப் பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிடமிருந்து பெற்று கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பித்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக http://www.tngasa.in என்ற இணையதளம் இன்று (15.12.2022) உயர்கல்வித் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள்  இன்று முதல் (15.12.2022)  முதல் 29.12.2022 வரை  பதிவு செய்யலாம். 

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும். 

இவ்வாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Guest Lecturer Post: அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்; டிச.27 கடைசி- விவரம்

உதவிப் பேராசிரியர் பணி இடத்திற்கான கல்வித் தகுதி பெற்றவர்களும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி என்ன?

* 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 
* நெட் / ஸ்லெட் அல்லது செட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

அல்லது

* உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஏதேனும் ஒன்றில் பிஎச்.டி. பட்டத்தை முடித்திருக்க வேண்டும். 

கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/TNGAS-GL-Instruction%20Tamil%202.0_15.12.2022_11.23AM%20(1).pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

பாடம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களை அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/1895%20Guest%20Lecturer%20Allotment%20District%20Wise.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: http://www.tngasa.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget