மேலும் அறிய

அதிகரிக்கும் மவுசு: CUET இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு 

2023ஆம் ஆண்டுக்கான க்யூட் (CUET) இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான க்யூட் (CUET) இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. 

44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 31 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்க்லைக்கழகங்கள் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இத்துடன் 27 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 66 தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் அடங்கும்.  

இந்தத் தேர்வு மே 21 முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஜூலை மாதத்தில் முடிவடையும். புதிய கல்வி ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. முன்னதாக 2023ஆம் ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி இரவு தொடங்கியது.

க்யூட் நுழைவுத்தேர்வு 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக  பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.

தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் பாடங்களின் தெரிவுகளைப் பொறுத்து, 3 ஷிஃப்டுகளாகத் தேர்வுகள் பல நாட்களுக்கு நடைபெறும். தேர்வர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணைய முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், 011 - 40759000 / 011 - 69227700 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம். cuet-ug@nta.ac.in என்ற இ- மெயில் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.

பிளஸ் 2 மதிப்பெண்கள் முக்கியமில்லை

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

கிளம்பிய சர்ச்சை

கடந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட க்யூட் தேர்வில் பல குழப்பங்கள், தாமதங்கள் ஏற்பட்டது சர்ச்சையானது. க்யூட் தேர்வுக்கு சுமார் 14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முன்னதாக சுமார் 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கும் ஜேஇஇ மெயின் தேர்வு 2ஆவது பெரிய நுழைவுத் தேர்வாக இருந்தது. 

நாட்டிலேயே அதிக அளவில் சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பிக்கும், மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு உள்ளது. இந்தத் தேர்வு பேனா மற்றும் காகித முறையில் (ஆஃப்லைன்) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://cuet.samarth.ac.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: 011 - 40759000 / 011 - 69227700

இ- மெயில் முகவரி: cuet-ug@nta.ac.in

*

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget