Anna University Results: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது; பார்ப்பது எப்படி?
Anna University Results: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதை மாணவர்கள் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் https://aucoe.annauniv.edu/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பருவத் தேர்வு முடிவுகள்:
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற முதுகலை முதலாமாண்டு செமஸ்டர் தேர்வு, எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு, முனைவர் படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 2022 நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. அதற்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்காகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை முதலாமாண்டு பருவத் தேர்வு, எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு, முனைவர் படிப்பு ஆகியவற்றிற்கு தேர்வுகள் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?
aucoe.annauniv.edu/regular_result
ஆகிய இரண்டு முகவரிகளை க்ளிக் செய்து, செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
coe1.annauniv.edu/home/என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், மாணவர்களின் லாகின் பகுதியில் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் Captcha-வைப் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
பாடத்திட்டம் மாற்றம்
20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே (2022- 23) அமலாகி உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைகிறது.
தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வாசிக்க..