மேலும் அறிய

Kalaignar library : மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம்... கலைஞர் நூலகம் என பெயர் சூட்டப்படுவதாக அரசாணை...

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூலகம் என பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூலகம் என பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 20.03.2023-ஆம் நாளன்று 2023-2024-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ஏனையவற்றுடன் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து கீழ்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:

“31 ... முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக தமிழ சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரை தாங்கி வரும் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்...”

2. எனவே, மேற்காணும் நூலகம் ”கலைஞர் நூற்றாண்டு நூலகம்”என அழைக்கப்படும் என அரசு அறிவிக்கை செய்து இதன் மூலம் ஆணையிடுகிறது.

முன்னதாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், வரும் ஜூன் 3-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதில் கட்டிடத்திற்கு ரூ.99 கோடியும், புத்தகம் வாங்குவதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

கலைஞர் நூலகம் கீழ்தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில்  கட்டப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, ஜன. 11ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நூலகத்தில் கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தவும், தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கும் வகையில் தேவையான புத்தகங்கள், இருக்கைகளும், 250 இருக்கைகள் வசதியுடன் கூடிய கலையரங்கமும் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில், குழந்தைகள் நூலகம், வாசகர்கள் தினசரி, மாத, வார பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும், 2வது தளத்தில் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம்,  திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறுகிறது.

இத்துடன் கலைஞர் ஆய்வகமும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த அரங்கில் அவரின் 4 ஆயிரம் ஆய்வறிக்கை புத்தகங்கள் இடம்பெறுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன. 3-வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ், இலக்கியப்பகுதி தளமாகவும், 4-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பகுதியாகவும், 5-வது தளத்தில் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண்கீழ் கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களின் பகுதியாகவும் அமைக்கப்படுகிறது. 6-வது தளத்தில் திறந்தவெளி படிப்பகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

கட்டிடத்தின் முழு வடிவிலான கட்டுமான பணிகள் நூறு சதவீதம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து, மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிந்தன. கட்டடத்தின் நடுப்பகுதியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடிப்பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. 

இத்தனை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதால்,  கலைஞர் நூலகம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று திமுக ஆட்சிக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வரும் டிசம்பர் மாதம் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 மாதத்திற்கு முன்பாகவே கலைஞர் நூலகப் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனை வரும் ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளன்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கப் போகிறார் என்று அறிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget