மேலும் அறிய

ஆதிதிராவிட, பழங்குடி பள்ளி, கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கையில் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கையில் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

அரசு அலுவலர்‌


மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ - தலைவர்‌
பழங்குடியினர்‌ நல அலுவலர்‌
அப்பகுதியில்‌ உள்ள ஒரு - உறுப்பினர்‌
பள்ளித்தலைமை ஆசிரியர்‌ அல்லது கல்லூரி முதல்வர்‌

மாவட்ட தலைநகர்‌ விடுதிகளுக்கு - உறுப்பினர்‌ 
மாவட்ட கல்வி அலுவலர்‌ மற்ற விடுதிகளுக்கு கல்வி ஆய்வாளர்‌


அரசு அலுவலர் அல்லாதோர்‌

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ - 1
ஆதிதிராவிடர்‌ இனத்தைச்‌ சார்ந்த உறுப்பினர்கள்‌- 2

1. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதிதிராவிடரல்லாத வகுப்பினராயிருப்பின்‌ மற்ற இருவரும்‌ ஆதிதிராவிடராயிருப்பர்‌.

2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ ஆதிதிராவிடராயிருப்பின்‌ மூன்றாவது உறுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினராயிருக்க வேண்டும்‌.

3. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ அமைச்சர்‌ பதவி வகிக்கும்‌ காலத்தில்‌ அவரின்‌ கருத்திற்கேற்ப ஒருவரை நியமிக்கலாம்‌. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ பதவி இடம்‌ காலியாக இருந்தால்‌ மாவட்ட ஆட்சியரே ஒருவரை நியமிக்கலாம்‌. மேற்கண்ட ஆலோசனைக்‌ குழுவினை (Advisory committees for selection of students for admission into Government hostels) அமைக்கும்‌ அதிகாரம்‌ அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக் குழுவின்‌ ஆயுட்காலம்‌ மூன்று ஆண்டுகள்‌ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ 1324 விடுதிகள்‌ இயங்கி வருகின்றன. இவ்விடுதிகளை மேம்படுத்திடும்‌ விதமாகவும்‌, விடுதியினை கணினிமயமாக்கும்‌ நோக்கிலும்‌, விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலி உருவாக்கம்‌ செய்யப்பட்டு, அனைத்து விடுதிக்‌ காப்பாளர்‌ , காப்பாளினிகளுக்கும்‌ தனித்தனியாக பயனாளர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்‌, விடுதிகளின்‌ அனைத்து விவரங்களையும்‌ (மாணாக்கர்‌, பணியாளர்‌, விடுதிக்கட்டமைப்பு, விடுதிகளுக்குரிய தளவாடப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ வசதிகள்‌‌) சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர்களால்‌ இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு வருகிறது.

இதைக் கண்காணித்திட ஏதுவாக வட்ட, மாவட்ட, மாநில அளவில்‌ உள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயனாளர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ வழங்கப்பட்டுள்ளது.  ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ விடுதிகளில்‌ தங்கும் மாணாக்கரை தேர்வு செய்வதில்‌ சில நிர்வாக சிக்கல்‌ ஏற்படுவதால்‌, அதனை சரி செய்திடும்‌ பொருட்டு விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) செயலியின்‌ மூலம்‌ இணைய வழியில்‌
சேர்க்கை நடத்தி மாணாக்கரை தேர்வு செய்திடலாம்‌ என ஆதிதிராவிடர்‌ நல ஆணையர்‌ அரசைக்‌ கோரியுள்ளார்‌.

அதனடிப்படையில்‌, ஆதிதிராவிடர்‌ நல பள்ளி 7 கல்லூரி விடுதிகளில்‌ தங்கி கல்வி பயிலும்‌ மாணாக்கர்‌ சேர்க்கைக்கான பின்வரும்‌ விதிமுறைகள்‌ மற்றும்‌ வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது :-

விதிமுறைகள்‌

* ஆதிதிராவிடர்‌ நல விடுதிகளில்‌ தங்கி கல்வி பயில விரும்பும்‌ மாணாக்கர்‌ இணைய வழியில்‌ online) https:tnadw.hms.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

* இணைய வழியில்‌ (online) பதிவேற்றம்‌ செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலரால்‌ விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்பட வேண்டும்‌.

* மேற்படி விண்ணப்பங்களில்‌ தகுதியுள்ள மாணாக்கரை தெரிவு செய்திடும்‌ பொருட்டு, அரசாணை (நிலை எண்‌. 195, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை நாள்‌. 02.08.1991 இல்‌ தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான ஆலோசனைக்‌ குழுவினை (Advisory committees for selection of students for admission into Government of Adi Dravidar Welfare Hostels) கூட்டி, மாணவரைத் தேர்வு செய்ய வேண்டும்‌.

* ஒவ்வொரு கல்வியாண்டின்‌ தொடக்கத்திலும்‌ விடுதியில்‌ தங்கிப் பயிலும்‌ மாணாக்கர்‌ புதுப்பித்தல்‌ விண்ணப்பத்தினை இணைய வழியில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

* இணைய வழியில்‌ விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்‌, சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவம்‌ பெற்று, அதனை பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும்‌. அவ்வாறு நேரடியாக பெறப்படும்‌ விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில்‌
அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின்‌ எண்ணிக்கையில்‌ காலியிடம்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌, அவர்களையும்‌ விடுதியில்‌ தங்கி கல்வி பயில மேற்படி குழுவிடம்‌ ஒப்புதல்‌ பெற்று, அனுமதி ஆணை வழங்கப்பட வேண்டும்‌. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின்‌ விவரங்களை இணையவழியில்‌ மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலரால்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.


ஆதிதிராவிட, பழங்குடி பள்ளி, கல்லூரி விடுதி மாணவர் சேர்க்கை: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

வழிகாட்டு நெறிமுறைகள்‌:

நான்காம்‌ வகுப்பு முதல்‌ கல்லூரி வரை பயிலும்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ 7, கிறித்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்‌ (85%), மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர்‌ (10%) பிற வகுப்பினர்கள்‌ (5% ) என்ற விகிதத்தில்‌ தேர்வு செய்ய வேண்டும்‌.

* பள்ளிக்கும்‌ வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல்‌ ஒருக்க வேண்டும்‌. மாணவியருக்கும்‌, பெற்றோரை இழந்த மாணவர்கள்‌ மற்றும்‌ தாய்‌ அல்லது தந்‌தை வெளியூர்களில்‌ பணிபுரிந்து பாதுகாவலர்‌ பொறுப்பில்‌ இருக்கும்‌ மாணவர்களுக்கும்‌மேற்படி நிபந்தனை பொருந்தாது )

* பெற்றோர்களின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2,50,000/-க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

* மாணாக்கருக்கு கல்வி பயிலும்‌ பள்ளி தலைமையாசிரியர்‌ , கல்லூரி முதல்வரின்‌ சான்று இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌. பள்ளி மாணாக்கருக்கு எமிஸ் எண்‌ மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்களுக்கு மத்திய, மாநில அரசால்‌ கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பதிவு எண்‌ இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

* விடுதியில்‌ தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும்‌ மாணாக்கர்‌ மற்றும்‌ அவர்களின்‌ பெற்றோர்களிடம்‌ விடுதியில்‌ உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக்‌ கட்டுப்பாட்டுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌, மேலும்‌ அதற்குண்டான கட்டணம்‌ செலுத்த வேண்டும்‌ எனவும்‌ உறுதி மொழிப்‌ பத்திரம்‌ பெறப்பட வேண்டும்‌.

* அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌, கலை மற்றும்‌அறிவியல்‌ கல்லூரிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்‌. 

* அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணாக்கர்‌ இல்லாத நிலையில்‌, அவ்விடுதியில்‌ அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின்‌ எண்ணிக்கையில்‌ காலியிடம்‌ இருக்கும்‌ நேர்வில்‌, தனியார்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணாக்கரையும்‌ தெரிவு செய்யலாம்‌.

இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget