![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூரில் ரேடியோ மூலம் பாடங்களை எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்- இயக்குநர் சமுத்திரக்கனி பாராட்டு...!
மாணவர்களுக்கு போரடிக்காமல் பாடம் கற்பிக்க கரூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெரும் முயற்சியால் முதல் முறையாக ரேடியோ கல்வி மூலம் நாள்தோறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு
![கரூரில் ரேடியோ மூலம் பாடங்களை எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்- இயக்குநர் சமுத்திரக்கனி பாராட்டு...! Actor Samuthirakani praised Karur Government School கரூரில் ரேடியோ மூலம் பாடங்களை எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்- இயக்குநர் சமுத்திரக்கனி பாராட்டு...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/25/3529dc76d8ab02fbe458f1936e7088df_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஈசநத்தம் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டில் இருந்து அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. 750 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மருதை வீரன், கனவு ஆசிரியர் விருது பெற்ற வணிகவியல் ஆசிரியர் கார்த்திகேயன் உட்பட 25 ஆசிரியர்கள் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்த பள்ளியில் கரூர், திண்டுக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு வணிகவியல் ஆசிரியராக 2014 ஆம் ஆண்டு சேர்ந்த கார்த்திகேயன் அதற்கு முன்பாக கோடை எப்.எம். வானொலியில் பணியாற்றினார். அவர்கள் கல்வி தொலைக்காட்சிக்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் கவன சிதறல் அதிகரிப்பதால் அதிலிருந்து மாணவர்களை மிட்கவும், அனைவரும் சிறப்பாக படிக்கவும் கல்வி ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் கார்த்திகேயன் கூறுகையில் ஆன்லைன் வகுப்பில் 50 மாணவர்கள் உள்ள வகுப்பின் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான பாடங்களை தயாரிக்கவும், அவற்றில் ஒளிப்பதிவு செய்யவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம். ஆசிரியர் பாடத்தை ஆடியோ வடிவில் என்னிடம் வழங்குவார்கள். அதனை பதிவு செய்து லிங்க்கை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வந்தோம். இதனை யூடியூப் வழியாக கொண்டு செல்லும் திட்டம் எங்களிடம் இருந்தாலும் யூடியூப்பில் நிறைய விளம்பரங்கள் வரும் தேவையில்லாத பலவற்றையும் மாணவர்கள் அறிந்து கொள்ள யூட்யூப் வழி வகுத்துவிடும். என்பதால் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த கல்வி ரேடியோவை தொடங்கினோம். பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தை ஸ்டூடியோவை பயன்படுத்தி ஆசிரியர்கள் லேப்டாப், ஆண்ட்ராய்ட் செல்போன் மூலம் பாடங்களை ஆடியோவாக ரெக்கார்டு செய்து அவற்றை ப்ரீ வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்கிறோம். அதற்கான லிங்க் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெற்றோர்களின் செல்போனிலேயே எப்போது வேண்டுமானாலும், அவற்றை எடுத்து படிக்கும் மாணவர்கள் நன்றாக படிக்க முடிவதாக தெரிவித்துள்ளனர். இந்த கல்வி ரேடியோவை மதுரை, கோவை, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏழாயிரம் மாணவர்கள் தொடர்கின்றனர்.
ரேடியோ தொடங்கியிருக்கும் தமிழகத்தில் முதல் பள்ளி என்ற பெருமையை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈசநத்தம் பள்ளி பெற்றுள்ளது. பள்ளியில் இந்த சேவைக்கு நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)