மேலும் அறிய

உதவித்தொகை, ஊக்கத்தொகை பெற இது கட்டாயம்: பள்ளி திறக்கும்போதே தொடங்கும் சிறப்புத் திட்டம்! அரசு அதிரடி

Aadhaar in TN schools: மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அனுப்ப பள்ளியிலேயே ஆதார் பதிவு முகாம் நடத்தப்பட உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும்‌ ஆதார்‌ எண்‌ பெறுவதற்கு புதிய  பதிவுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ புதுப்பித்தல்‌ தொடர்பான பணியினை மேற்கொள்வது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுரு கூறி உள்ளதாவது:

''மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள்‌, மடிக்கணினி, சீருடை, காலணி, புத்தகப்பை, கிரையான்ஸ்‌, வண்ணப்‌ பென்சில்கள்‌, கணித உபகரணப்பெட்டி, புவியியல்‌ வரைபட புத்தகம்‌, கம்பளிச்‌ சட்டை, மழைக்கால ஆடை, உறைக்‌ காலணி, காலுறைகள்‌, பேருந்து பயண அட்டை மற்றும்‌ மிதிவண்டிகள்‌ போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன்‌ மூலம்‌ மாணவர்களின்‌ தேவைகள்‌ முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கு அளிக்கப்படும்‌ நலத்திட்டங்கள்‌ பயனாளிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக அனுப்புவதற்கு ஆதார்‌ எண்‌ அவசியமாகிறது.

தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்‌தொகை, ஊக்கத்‌ தொகை

பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ மாணவ, மாணவியர்களின்‌ நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள, அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ அனைவருக்கும்‌ ஆதார்‌ அட்டையை வழங்கிடுவது அவசியமாகும்‌. குறிப்பாக 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அனைத்து நிலை மாணவர்களும்‌ இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்‌ தொகைகள்‌ மற்றும்‌ ஊக்கத்‌ தொகைகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும்‌ ஊக்கத்‌ தொகை அனைத்தும்‌, மாணவ மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில்‌ முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும்‌ விதமாக, நேரடி பயனாளர்‌ பரிமாற்றம் மூலம்‌ பயனாளர்களின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும்‌ முறை நடைமுறைப்‌படுத்தப்பட்டுள்ளது.

“பயிலும்‌ பள்ளியிலேயே ஆதார்‌ பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின்‌ கீழ்‌ அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார் பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ அப்பள்ளியிலேயே ஆதார்‌ எண்‌ பெறுவதற்கு புதிய பதிவுகள்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ புதுப்பித்தல்‌ தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னனு நிறுவனத்தினைக்‌  கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌ மேற்கொள்ள அனுமதியளித்தும்‌, அப்பணிகளுக்கென தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை அலுவலர்களுக்கான பணிகள்‌ மற்றும் பொறுப்புகள்‌ சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.

ஆதார்‌ பதிவு மற்றும்‌ புதுப்பித்தல்‌

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம்‌, இந்தியத்‌ தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார்‌ பதிவுக்‌ கருவிகளைக்‌ கொள்முதல்‌ செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம்‌ ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம்‌, ஆதார்‌ பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார்‌ தரவு உள்ளீட்டாளர்களைத்‌ தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும்‌ ஆதார்‌ பதிவு மற்றும்‌ புதுப்பித்தல்‌ பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில்‌, “பயிலும்‌ பள்ளியிலேயே ஆதார்‌ பதிவு” என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும்‌ கல்வி ஆண்டின்‌ பள்ளி துவக்க நாளில் அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள வட்டாரங்களிலும்‌ முழுவீச்சில்‌ செயல்பட உள்ளது.

இந்நிகழ்வினை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ துவங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரகுருபரன்‌ தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget