மேலும் அறிய

8th Public Exam: தனித்தேர்வர்களுக்கு எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தனித் தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தனித் தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ இன்று தெரிவித்துள்ளதாவது:

’’ 1. ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு

ஆகஸ்ட்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ள தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்புப் பொதுத்தேர்விற்கு 01.08.2023 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள் நாளை (20.06.2023) பிற்பகல் முதல் 28.06.2023 வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பாகத் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில்‌ குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service Centre) நேரில்‌  சென்று ஆன்லைன் மூலம்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

2. தேர்வுக்‌ கட்டண விவரம்

விண்ணப்பித்த பின், தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125/- மற்றும்‌ ஆன்லைன்‌ பதிவுக் கட்டணம்‌ ரூ.70/- என மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில்‌ நேரடியாகச் செலுத்தலாம்‌. 

மேற்குறிப்பிட்ட நாட்‌களில் விண்ணப்பிக்கத்‌ தவறியவர்கள்‌ 30.06.2023 மற்றும்‌ 01.07.2023 ஆகிய நாட்களில்‌ தேர்வு கட்டணத்துடன்‌ தட்கல்‌ விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.500/-ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

3. விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை

* முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌

விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌ / பள்ளி பதிவுத் தாள் நகல்‌ / பிறப்புச்‌ சான்றிதழ்‌ நகல்,‌ இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை இணைத்த சமர்ப்பிக்க வேண்டும்‌

* ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌

ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண்‌ சான்றிதழின்‌/ சான்றிதழ்களின்‌ நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌. 

தனித் தேர்வர்கள்‌ ரூ.42-க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

4. ஆன்லைன்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌. தபால்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

5. தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ காணலாம்‌’’.

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

தேதி  கிழமை நேரம்‌ பாடம்‌
07.08.2023 திங்கட்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  தமிழ்‌
08.08.2023 செவ்வாய்‌க்கிழமை‌ காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  ஆங்கிலம்‌
09.08.2023 புதன்‌ கிழமை  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  கணிதம்‌
10.08.2023 வியாழக்‌கிழமை காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  அறிவியல்‌
11.08.2023 வெள்ளிக்கிழமை‌  காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை  சமூக அறிவியல்‌

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, தனித் தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget