மேலும் அறிய

11 12th Practical Exam: 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; தேர்வுத் துறை தகவல்

Practical Exam Time Table 2023 for 11th 12th: தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மார்ச் 7 முதல் 10ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகள்‌ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில்‌ மேல்நிலை முதலாம் ஆண்டு/ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதும்‌ பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும்‌ தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத்‌ தேர்வுகளை 07.03.2023 முதல்‌ 10.03.2023 வரையிலான நாட்களில்‌ நடத்தப்பட வேண்டும்‌. செய்முறைத்‌ தேர்வு தொடர்பான விரிவான அறிவுரைகள்‌ பின்னர்‌ தெரிவிக்கப்படும்‌ என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா காரணமாக கடந்த 2 கல்வி ஆண்டுகளில் கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில், 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

அட்டவணை வெளியீடு

இந்த நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி  முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022 Tamil Nadu

மார்ச் 13 - மொழித்தாள்
மார்ச் 15-  ஆங்கிலம்

மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி

மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்

ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

செய்முறைத் தேர்வுகள்

இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 7 முதல் 10ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ தொடர்பான ஆய்வு அலுவலர்கள்‌ கூட்டம்‌ 30.01.2023 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில்‌ அறிஞர்‌ அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget