மேலும் அறிய

நெருங்கும் தீபாவளி! மாணவர்களுக்கு அறிவுரைகள்! பள்ளிகளில் விழிப்புணர்வு

பொதுமக்களால் 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய நாளில், சில இடங்களில் மக்களின் கவனமின்மை, அலட்சியமாக பட்டாசு வெடிப்பதால் தீவிபத்து ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறார்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகளை பள்ளி மாணவ /மாணவியர் பின்பற்றிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தக்க அறிவுரைகளை பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியின் தகவல் பலகைகளில் ஒட்டி நலத்திட்டங்கள் பெற வரும் மாணாக்கர்கள் / பெற்றோர்கள் அறியும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநரின் கடிதத்தில் பின்வருமாறு  தீபாவளி பண்டிகையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்பாக பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. பட்டாசுகளை கொளுத்துபோது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள். டெரிகாட்டான் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.
  2. பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள். கால்களில் காலணி அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும்.
  3. பட்டாசுகளை கொளுத்தி, கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்க வேண்டாம். மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். வெடிகளை வெடிக்கச் செய்ய நீளமான ஊதுவர்த்தியினை பயன்படுத்தி பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வெடிக்கச் செய்ய வேண்டும்.
  4. மூடிய பெட்டிகளில் / பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கச் செய்யாதீர்கள்.
  5. ராக்கெட்டுகள் உள்ளிட்ட பட்டாசுகளை வெட்ட வெளியில் உள்ள குடிசைகளுக்கு அருகில் அல்லது கீற்றுக் கொட்டகைகளுக்கு அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  6. பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்காதீர்கள்.
  7. பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
  8. குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.
  9. நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்கு அருகாமையிலோ அல்லது நோயாளர் பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றிற்கு அருகாமையிலோ பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
  10. விலங்குகள் மற்றும் செல்லப் பிராணிகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். மேலும் பறவைகள் அடைக்கலமாகும் பகுதிகளிலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதை தவிர்க்க ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.
  11. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகாமையில் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கவோ, கொளுத்தவோ செய்யாதீர்கள்.
  12. அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். ஒருநாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்.
  13. வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும்.
  14. விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளைக் கொளுத்த அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும்.
  15. இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

   16. உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆகியோர் பட்டாசு வெடிக்கும்பொழுது வந்தால் அவர்கள் பாதுகாப்பாக கடந்து சென்ற பின்னர் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

  1. பட்டாசுகளை மின் சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உருளை அருகில் வைத்து வீடுகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேலை முடிந்ததும் கம்பி நீட்டிய இன்ஸ்டா காதலன்.. தாலி கட்டிய கையோடு போன கணவனை தேடி போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
வேலை முடிந்ததும் கம்பி நீட்டிய இன்ஸ்டா காதலன்.. தாலி கட்டிய கையோடு போன கணவனை தேடி போன பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
P. Wilson : ’OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துக’ பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!
P. Wilson : ’OBC இடஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துக’ பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்..!
300 போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடர்கள்; மயிலாடுதுறை தீர்த்தவாரி கூட்டத்தில் நகைகள் பறிப்பு..!
300 போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடர்கள்; மயிலாடுதுறை தீர்த்தவாரி கூட்டத்தில் நகைகள் பறிப்பு..!
மதுரை தனிஷ்க் கொள்ளை: ரூ.15 கோடி நகைகள் முழு மீட்பு! மூவர் கைது, மேலும் பலருக்கு தொடர்பா?
மதுரை தனிஷ்க் கொள்ளை: ரூ.15 கோடி நகைகள் முழு மீட்பு! மூவர் கைது, மேலும் பலருக்கு தொடர்பா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget