மேலும் அறிய
Advertisement
கார் விபத்து: இன்ஸ்சூரன்ஸ் பணம் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை !
தற்கொலை தொடர்பான வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே கடன் வாங்கி கார்க்கு இன்சூரன்ஸ் செலுத்திய இளைஞர்., விபத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் போது உரிய இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் வீடியோ மற்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த அம்மட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராமன்., இவர் கடந்த மார்ச் மாதம் தனது கார்க்கு உறவினரான ராஜ்குமார் என்பவர் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றில் ரூபாய் 28 ஆயிரத்திற்கு பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்ததாக கூறப்படுகிறது. பாலிசி எடுத்த, அடுத்த மாதத்திலேயே கார் விபத்துக்குளானதில் சேதமடைந்த காரை பழுது நீக்கவும், காயமடைந்த தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்குமான இன்சூரன்ஸ் தொகை கோரி உறவினர் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் ஐந்து மாதமாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இன்சூரன்ஸ் செலுத்து அவரது கிராமத்தில் உள்ள ஒரு நபரிடம் கடன் பெற்று இன்சூரன்ஸ் செலுத்தி இருந்த சூழலில் நடந்த விபத்து காரணமாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாகவும் வேலை இழந்ததால் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாது தவித்துள்ளார்., மறுபுறம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததாலும், வாகனத்தையும் சரி செய்ய முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்த தங்கராமன் அவரது வீட்டில் மரணவாக்குமூலம் என வீடியோ பதிவு செய்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.,
தகவலறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல்துறையினர் தங்கராமனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்திய போது வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே தற்கொலை செய்ய போவதாக கடிதமும் எழுதி வைத்திருந்ததை கண்ட காவல்துறையினர் கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்., இந்த கடன் பெற்று இன்சூரன்ஸ் செலுத்திய நபர் விபத்து ஏற்பட்ட போதும் இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது குறித்தும்., தற்கொலை தொடர்பான வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion