கரூரில் சரக்கு வாகனம் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
மொபட் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து தொழிலாளி பலி.
குளித்தலை, அடுத்த ராஜேந்திரன் கருங்கால பள்ளி சேர்ந்தவர் செல்வராஜ் கூலி தொழிலாளி. இவர் டிவி,எஸ் எக்ஸெல் மொபைலில் வெளியூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை பெரிய பாலம் பரிசல் துறை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கரூரில் இருந்து பெட்டவாய்த்தலை நோக்கி சென்ற ஈச்சர் சரக்கு வாகனம் மொபைல் மீது மோதியதில் செல்வராஜ் தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் உயிரிழந்தார்.
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி.
கடவூர் தாலுகா விராலிப்பட்டி அடுத்த கட்டணியூறை சேர்ந்தவர் கணேசன், இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்று உள்ளார். அப்பொழுது நிலை தடுமாறி அவர் அங்குள்ள கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். பல இடங்களில் தேடியும் கணேசன் காணவில்லை என்பதால் அவர் மகன் சசிகுமார் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது கணேசன் நீரில் மிதந்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறைதீயணைப்பு வீரர்கள் கணேசன் உடலை மீட்டனர். புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
குட்டப்பட்டி வாரி வாய்க்காலில் இறங்கி விளையாடிய சிறுமி நீரில் மூழ்கி இறப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடக்கு மயிலாடி தகுதியைச் சேர்ந்த மாணிக்கம் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹோம் காட்டில் வேலை செய்து வந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரதிக்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், குட்டப்பட்டியில் உள்ள தனது மாமியார் மலர் செல்வி வீட்டில் குழந்தையை விட்டு செல்வது வழக்கம் அதுபோல கடந்த 12ஆம் தேதி விட்டுச்சென்ற போது பிரதிக்ஷா வீட்டு வாசலில் நின்றவர் விளையாட்டுத்தனமாக அருகில் உள்ள வாரி வாய்க்காலில் இறங்கிவிட்டார் இதில் நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக குழந்தையை குளித்தலை அரசு மருத்துவமனையில் காண்பித்த போது பிரதிக்ஷ இறந்து விட்டதாக கூறியுள்ளார். குளித்தலை காவல் நிலையத்தில் மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து புகார் படி, குளித்தலை போலீசார் சரக்கு வாகன டிரைவர் மேல் நங்கவாரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.