கடையில் பணியில் இருந்த பெண் படுகொலை: ராஜபாளையத்தில் பயங்கரம்!
காய்கறி கடையில் இருந்து போன் செய்த கணேசன், இந்திராணி போனை எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை போய் பார்க்கச் சொன்ன போது கழுத்து அறுபட்டு கிடந்தது தெரியவந்தது.
ராஜபாளையம் பட்டப்பகலில் பெண் கழுத்தை அறுத்து கொலை! பெட்டிக் கடைக்குள் நுழைந்து கொலை செய்து தப்பி ஓடிய மர்ம நபருக்கு வலைவீச்சு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவில் பட்டப்பகலில் பெட்டி கடைக்குள் நுழைந்து பெண் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். கொலை செய்துள்ள நபர் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி .இந்து ராணி வயது 40. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கணேசன் பெட்டி கடை வைத்துள்ளார். இவர் சந்தையில் காய்கறி வாங்குவதற்கு சென்ற சமயத்தில் இந்திராணி கடைக்குள் இருப்பது வழக்கம். இன்று இந்திராணி கடைக்குள் இருந்த போது சுமார் பதினோரு மணி அளவில் யாரும் இல்லாத சமயத்தில் லேசாக மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் பெட்டி கடைக்குள் நுழைந்து இந்திராணியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். காய்கறி கடையில் இருந்து போன் செய்த கணேசன், இந்திராணி போனை எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை போய் பார்க்கச் சொன்ன போது கழுத்து அறுபட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் ராஜபாளையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் தெற்கு போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினார்கள்.
மேலும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்திராணி பலரிடம் பழக்கம் உள்ளதாகவும், அதை சேர்ந்த ஒரு நபர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சிலவற்றிக்கு...
Mohan Singh Death: ஆப்கான்., vs நியூசி., போட்டி துவங்கும் முன் அறையில் தற்கொலை செய்த பிட்ச் பராமாரிப்பாளர்!https://t.co/dCOoVbkRWB#mohansingh #AbuDhabi #T20WorldCup
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த நடிகர்... காரில் ஒர்க்அவுட் செய்த திருடர்கள்... பணமும் போச்சு... பர்சும் போச்சு!https://t.co/GgvMsJPymz#Saheb #BengaliActor #Theft
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
சூப்பர் சிங்கர் மாளவிகா ‛லிப் டூ லிப்’ கிஸ் - வைரலாகும் புகைப்படம்..!#supersingermalavika #lipkisshttps://t.co/pQAfNE3DRD
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
‛ரூ.900 கோடி ஃபைல்ல முதலில் எடுங்க முதல்வர் அய்யா...’ அதிமுகவை சாடும் இயக்குநர் சேரன்!https://t.co/d3D6zZj23W#DirectorCheran #AIADMK #Criticism
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்