மேலும் அறிய

விழுப்புரத்தில் முகமூடி கொள்ளயர்கள் அட்டகாசம் ; அடுத்தடுத்து 4 மீன் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறிப்பு

விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 4 மீன் வியாபாரிகளைத் தாக்கி பணம், செல் போன்களை பறித்துச் சென்ற முகமூடி திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 4 மீன் வியாபாரிகளைத் தாக்கி பணம், செல் போன்களை பறித்துச் சென்ற முகமூடி திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்த மீன் வியாபாரி துரை (35) இவர்,  அதிகாலை 2 மணியளவில் வியாபாரத்திற்கு மீன் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார். பனையபுரம் சென்ற போது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் வழிமறித்து, கத்தியால் துரையின் கையை கிழித்து அவரிடமிருந்த 2,000 ரூபாய் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அதே போல, ராதாபுரத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி குமார் (38)  என்பவரை  அதிகாலை 3:00 மணியளவில் கப்பியாம்புலியூர் மேம்பாலம் அருகே முகமூடி அணிந்த 3 பேர், கத்தியால் தாக்கி, 3,000 ரூபாய், மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

மேலும், ராதாபுரத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி முனுசாமி, (40) என்பவரிடமும் அதிகாலை 3:30 மணியளவில் மேல்பாதி சமத்துவபுரம் அருகே முகமூடி அணிந்த 3 பேர் தாக்கி, 3,000 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றனர். தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரத்தில் வழிப்பறி

விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 50; மீன் வியாபாரி. இவர், அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள மொத்த மீன் மார்கெட்டில் மீன் வாங்குவதற்காக, அதிகாலை 2:00 மணிக்கு மொபட்டில் சென்றார். மேல்பாதி கிராமம் அருகே பல்சர் பைக்கில் வந்த முகமுடி அணிந்த 3 பேர் முனுசாமியை வழிமறித்து கத்தியால் தாக்கி, 5,800 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றனர். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget