விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் ‛மெகா ஊழல்’... ஆர்டிஐ மூலம் அம்பலம்!
விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விவசாயகள் நிறைந்த மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கான விவசாய நிலத்திற்கும், பயிர்களுக்கும் காப்பீடு கேட்டு அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது வழக்கம். அதன் படி விழுப்புரம் மாவட்டத்திலும் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகள் மனு அளித்துள்ள நிலையில் பயிர் காப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
OPS Photo Removed : ஓபிஎஸ் பெயர்,புகைப்படம் அழிப்பு.. ஆட்டத்தை தொடங்கிய சி.வி.சண்முகம்! CV Shanmugam
மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலமற்றவர்கள் மற்றும் பயிர் செய்யப்படாமல் உள்ள நிலத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் , உதவியாளர்கள் ஆகியோர் 500 முதல் 2000 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியானவர்களுக்கும், போலியான பெயர்களில் பயிர் காப்பீட்டிற்கான அடங்கல் சீட்டாக்களை வழங்கி மோசடியில் ஈடுப்பட்டு வருவது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள செத்தவரை கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராமகிருஷ்ணன் என்பவர் காப்பீடுக்கான மனுக்களை மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை அலுவலகம், வட்டாச்சியர் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்தும் இப்படி கேட்காததால் இதன் உண்மை நிலையை கண்டறிவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்த தகவலை பெற்றுள்ளார்,. இதில் நிலமற்ற விவசாயிகள் மற்றும் பயிர் செய்யாத விவசாயிகள் பெயரில் அதிகாரிகள் போலி போலியாக காப்பீடு ஆணை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆதரத்தோடு அந்த விவசாயி வெளியிட்டுதுள்ளார். தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றாலும் உணவளிக்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்ககின்ற வகையில் அதிகாரிகள் நடந்துக்கொள்வது உண்மையாக பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செய்யப்படும் துரோகம் என சமுக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்