Crime : அரசு மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய மாற்றுத்திறனாளி பெண்...! 3 பேர் கைது..!
விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜயவாடாவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது விஜயவாடா. அங்கு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாம்பே காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஸ்ரீகாந்திற்கு அறிமுகமாகியுள்ளார். ஸ்ரீகாந்த் அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீகாந்தை அந்த மாற்றுத்திறனாளி பெண் வாம்பே காலனியில் சந்தித்துள்ளார். அதன்பின்பு, அந்த மாற்றுத்திறனாளி பெண் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த பெண்ணின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புதன்கிழமையான நேற்று முன்தினம் காலை சுயநினைவின்றி மருத்துவமனை வளாகத்தில் இருந்த அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
பின்னர், அவரை கடந்த செவ்வாய்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்திற்கு அழைத்து வந்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். பின்னர், ஸ்ரீகாந்த் அங்கிருந்து சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் அந்த மாற்றுத்திறனாளி பெண் இருப்பதை கண்ட ஸ்ரீகாந்தின் நண்பரான மருத்துவமனை ஊழியர்களான பாபுராவ் மற்றும் பவன்கல்யாண் ஆகிய இருவரும் அந்த பெண்ணிடம் சென்று ஸ்ரீகாந்த் அந்த பெண்ணை நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர். பின்னர். அவர்கள் இருவரும் இணைந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதனால், அந்த பெண் மயக்கமடைந்து சுய நினைவில்லாத நிலைக்குச் சென்றுள்ளார்.
பின்னர், அடுத்த நாள் காலையில் அந்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் ஸ்ரீகாந்த் 26, பாபுராவ் 23 மற்றும் பவன்கல்யாண் 23 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளி பெண்ணை மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயே மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்