வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்! செருப்பு மாலை போட்ட கும்பல் - ம.பியில் அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shocking Video: மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்:
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த இளைஞர், திருமணமான ஒரு பெண்ணுடன் வெளியூர் சென்றதாக தெரிகிறது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ராஜஸ்தானில் இருந்து இருவரையும் உஜ்ஜைனுக்கு அழைத்து வந்தனர்.
இதனை அடுத்து, இளைஞரை மரத்தில் கட்டி வைத்து, செருப்பு மாலை அணிவித்து கொடுமைப்படுத்தி கிராம மக்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால், கூச்சலிட்ட இளைஞரின் வாயில் சொருப்பை திணித்தனர். மேலும், அந்த பெண்ணையும் செருப்பால் தாக்கியதாக தெரிகிறது.
இதோடு விடாமல், அந்த இளைஞரை மரட்டில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கி அவருக்கு மொட்டை அடித்து பாதி மீசையை எடுத்துள்ளனர். மேலும், அவருக்கு கட்டாயப்படுத்தி சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஷாக் வீடியோ:
அந்த வீடியோவில், இளைஞரை அமரவைத்து ஒரு கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. இளைஞருக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குகிறது. மேலும், ஒரு பாட்டிலில் சிறுநீரை அடைத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைப்பது போன்று வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரிகிறது.
A man was allegedly beaten up, forced to drink urine and wear a garland of shoes after he eloped with a married woman in #MadhyaPradesh's #Ujjain district, prompting the police to initiate action into the incident.
— Hate Detector 🔍 (@HateDetectors) March 20, 2024
Some videos of the incident went viral on social media but no… pic.twitter.com/lNNgChQTiD
இந்த சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நித்தேஷ் பார்கவா கூறுகையில், ”மூன்று அல்லது நான்கு நாட்கள் முன்பு நடந்த சம்பவம் இது. இந்த சம்பவம் வீடியோவை நேற்று பார்த்தோம். பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்டோம். அதோடு, அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை.
இதன்பின், பாதிக்கப்பட்ட நபர் எங்களை தொடர்பு கொண்டு விரையில் சந்திக்க வருவதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தின் பின்னணி முழுமையாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நபரின் பேசிய பிறகு தான் என்னவென்று உறுதி செய்யப்படும். பாதிக்கப்பட்ட நபர் எந்த புகாரும் இதுவரை அளிக்கவில்லை" என்றார்.