மேலும் அறிய

Vellore Girl Incident :வேலூரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... வாண்டடாக வாயை கொடுத்து குற்றவாளிகள் சிக்கியது எப்படி...?

வேலூரில் நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் நகையை பறித்த சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள  ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2  இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவரை தாங்களே தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது, அந்த 2 இளைஞர்களும் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது .

இதையடுத்து, முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்ததாகவும் போதையில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், 2 மைனர் உட்பட 4 பேரை கைது செய்து  விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து, நேற்று மத்தியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது.  அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16 ம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 1.00 மணியளவில் வெளியே வந்துள்ளனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும் , அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும்,  தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.  மறைவாக அழைத்துச்சென்ற தங்களிடமிருந்த செல்போன்கள், சுமார் ரூ . 40 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் , எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் இ மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக காவல்துறை கைதானவர்களிடம் மேலும் விசாரிக்கையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”வேலூர் காட்பாடியில் திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர்.  இவர்களை நோட்டமிட்ட 4 பேர்  ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்க செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் ஏருங்க என கூறியுள்ளனர். 

ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளர். ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்க்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த  பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.


அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்ததாகவும் அவர்களிடமிருந்து செல்போன்கள்,  ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றாதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடித்த பின்புதான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தனர். 

இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, எஸ்.பி ராஜேஷ் கண்ணண் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
Southern Railway: சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
Embed widget