மேலும் அறிய

வேலூரில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தீக்குளிப்பு - சாதி பெயரை சொல்லி காவலர் திட்டியதாக புகார்

தீ குளித்த சரத் என்ற இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் தீக்குளித்த சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தி உள்ளனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத் வயது (25). இவர் கடந்த 11ஆம் தேதி மாலை திடீரென மேல்பாடி காவல் நிலையத்துக்கு சற்று தொலைவில் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தீ குளித்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த பொது மக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீக்காயங்களுடன் அலறித் துடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைக்கின்றன.

வேலூரில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தீக்குளிப்பு - சாதி பெயரை சொல்லி காவலர் திட்டியதாக புகார்

அந்த வீடியோ காட்சிகளில் பேசும் சரத்குமார், 'திருவலம் காவல் நிலைய காவல்துறையினர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தினார்கள். நான் பட்டியலின இளைஞர் என்பதால் மேல்பாடி எஸ்.ஐ கார்த்திக் என்னை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கிறார். சில நாள்களுக்கு முன்பு செருப்பால் அடித்தார். எப்போது பார்த்தாலும், சாதிப் பெயரைச் சொல்லியே அடிக்கிறார். என் தம்பி வழக்கில் என்னையும் சேர்த்துவிட்டுட்டு அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு சொன்னாலும் மிரட்டி வருகிறார். நெல் அறுவடை செய்யப்பட்ட பணம் வாங்குவதற்காக போய்க்கிட்டிருந்த என்னை மடக்கி, எஸ்.ஐ கார்த்திக் ஹெல்மெட்டாலயே என் தலையில அடித்தார். பின்னர் காவல் துறையினர் எனது வீட்டுக்கு வந்து அவதுராக பேசுகின்றனர், நான் நெல் அறுக்கும் இயந்திரம் வைத்துள்ளேன் அதை ஓட்டிச்செல்லும் போது நிறுத்துகின்றனர். இதனால் எனக்கு அசிங்கமாக உள்ளது என கூறினார்.

வேலூரில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தீக்குளிப்பு - சாதி பெயரை சொல்லி காவலர் திட்டியதாக புகார்

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, மேல்பாடி காவல் நிலையம் அருகே தீ குளித்த சரத் என்ற இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் தீக்குளித்த சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தி உள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் கடத்தல் மற்றும் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளது. போக்சோ வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் எஸ்.ஐ ஒருவர் சரத்தின் வீட்டுக்கு சென்று நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு வரும் படி கூறியுள்ளார் இதை திசை திருப்பவே அந்த இளைஞர் மதுபோதையில் வந்து தீ குளித்துள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ கார்த்தி என்பவர் சரத் என்ற வாலிபரை அவதுராக பேசியதாகவும், தாக்கியதாவும் கூறி 11ஆம் தேதி இரவு மேல்பாடி காவல் நிலையம் அருகில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து மேல்பாடி எஸ்ஐ கார்த்தியை திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படைக்கு  மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget