Crime: ஆசிரியர்களின் குரூரம்.. மைனர் பெண்கள் கடத்தல்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..
வெவ்வேறு இடங்களில் இரண்டு ஆசிரியர்கள் தங்கள் பெண் மாணவர்களுடன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெவ்வேறு இடங்களில் இரண்டு ஆசிரியர்கள் தங்கள் பெண் மாணவர்களுடன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பீகாரில் உள்ள சிதாமர்ஹியைச் சேர்ந்த ஷம்ஷேர் ஆலம் மதரஸாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் சிறுமியுடன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேமன்பூர் ரயில் நிலையம் அருகே, காவல்துறையினர் ஆசிரியர் மற்றும் சிறுமியை பிடித்தனர். சிறுமியை மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
இப்ராஹிமாபாத்தை சேர்ந்த தனியார் ஆசிரியர் நித்தேஷ் குமார் என்பவர், 15 வயது சிறுமியுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவல்துறை அதிகாரி தரம்வீர் சிங் கூறுகையில், சிறுமி தனது தாய்வழி தாத்தாவின் கிராமத்தில் வசித்து வந்தார். சுரேமன்பூர் ரயில் நிலையம் அருகே ஆசிரியரை கைது செய்த காவல்துறை சிறுமியை மீட்டனர்.
மீட்ட இரண்டு சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
போக்சோ சட்டம் :
கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு :
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)