மேலும் அறிய

Crime: மணப்பாறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிராம மக்கள் மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அழகிரெட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ஜெயா (வயது 16). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு 12-ம் வகுப்பிற்கு செல்ல இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த அந்த மாணவியை சந்திப்பதற்காக மணப்பாறை அருகே உள்ள செவலூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கிராம மக்கள் அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதற்கிடையே மாணவியின் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து வெளியில் சென்று இருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜெயா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 

Crime: மணப்பாறை அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
 
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவி ஜெயாவின் உடலை நேற்று மதியம் பிரேத பரிசோதனைக்கு திருச்சிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜெயா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியை சந்திக்க வந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget