Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது
Karur : கரூர் அருகே அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டை சார்ந்த மூன்று நபர்கள் கைது.
கரூர் அருகே சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டை சார்ந்த மூன்று நபர்கள் கைது.
பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த முகம்மது அலாம் சர்தார் 49, இரண்டாவது மனைவி மோல்புல்னேசா 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் சர்தார் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதி பெறாமல் பங்களாதேஷ் நாட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று அங்கு கூலி வேலை செய்து போலியான ஆவணங்களை தயார் செய்து கொண்டு 7 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: Crime: தமிழக போலீசாரை தாக்கிய வட மாநில கும்பல்... 2 போலீஸார் பேர் பலத்த காயம்..
மேலும் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பதிவு செய்துள்ளார். தற்போது பாஸ்போர்ட் சரி பார்ப்பதற்காக இன்று க. பரமத்தி காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு நேரில் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆவணங்களை பார்த்த போது முரண்பாடாக இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: Bigg Boss 8 : என் மகனுக்கு எதுவுமே பண்ணல...மனம்விட்டு பேசிய முத்துகுமரனின் தந்தை
இதனால் குடோனில் வேலை பார்த்து தங்கி வரும் குப்பம் கிராமம் பகுதியில் உள்ள தேங்காய் நார் தயாரிக்கும் கம்பெனிக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதல் மனைவி செபாலி என்பவரை பார்த்து பாஸ்போர்ட் விண்ணப்பித்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க:
மேலும் முகம்மது அலாம் சர்தார் இரண்டாவது மனைவி மோல்புல்னேசன் 31 மற்றும் முதல் மனைவியின் மகன் பலால் ஹுசைன் 25 ஆகியோர் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் மூவரின் அடையாள அட்டையை பார்த்த போலீசார் சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தங்கி வந்தது தெரியவந்தது.
இதனால் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா என்பது குறித்து க.பரமத்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.