Crime: தந்தைக்கும், தங்கைக்கும் கொலை மிரட்டல் விடுத்த மகன்.. தாயைக் கொன்ற வெறி.. நடந்தது என்ன?
Crime: தாய் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Crime: தாய் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த தந்தை, தங்கைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை: வேளச்சேரி பகுதி திரு.வி.க தெருவில் வசித்து வந்தவர் லட்சமி (47). இவருக்கு மகன், மகள் உள்ளனர். மகன் மூர்த்தி என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து வெளியில் சென்றவர். மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாய் லட்சுமியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு சாப்பாடு தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார். அப்போது மூர்த்தி மீண்டும் சமைத்து தர வேண்டும் என கேட்டுள்ளார். " குடித்துவிட்டு வருவாய் உனக்கு சமைத்து தர வேண்டுமா” என தாய் லட்சுமி கோபத்தில் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாங்குவாதங்கள் ஏற்பட்டது. பின்பு ஆத்திரமடைந்த மூர்த்தி வீட்டில் அரிவாள்மனையை எடுத்து வந்து தாய் லட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் தாய் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் தாய் லட்சுமியை வெட்டி கொலை செய்துவிட்டு மூர்த்தி தப்பியோடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாயை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மகன் மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான தந்தை ராமலிங்கம் (57), தங்கை செல்வி (30) ஆகியோர் வழக்கு விசாரணக்கு நேற்று முன்தினம் அல்லிகுளம் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
இதனை அறிந்த மூர்த்தி, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, ”எனக்கு எதிராக சாட்சி சொன்னால் உங்களையும் கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி முகமது பாருக்கிடம் தந்தை ராமலிங்கம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோரும் இதைப் பற்றி கூறினர். பின்பு இதுகுறித்து அல்லிகுளம் நீதிமன்றத்தில் இருந்து வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து வேளச்சேரி போலீசார் மூர்த்தி மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்” என்பது குறிப்பிடத்தக்கது.