மேலும் அறிய

Crime : ’லவ் பண்ணிதான் ஆகணும்’ : கல்லூரி மாணவியிடம் இளைஞர் தகராறு.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை

சென்னையில் பள்ளிப்பருவ காதலை மீண்டும் தொடர வேண்டும் என்றுக்கோரி தனியார் கல்லூரி ஒன்றின் முன்பு மாணவியை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிப்பருவ காதலை மீண்டும் தொடர வேண்டும் என்றுக்கோரி தனியார் கல்லூரி ஒன்றின் முன்பு மாணவியை கையை பிடித்து இழுத்து தகராறு செய்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் பொன்னிமேடு பகுதியை சேர்ந்தவர் 18 வயதான இளம்பெண். இவர், தற்போது தேனாம்பேட்டையில் பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் அந்த பெண் கல்லூரிக்குள் சென்று மாலை வீடு  வெளியே வந்துள்ளார். அப்போது,  கல்லூரி வளாகத்தின் முன்பு தன்னுடன் பள்ளியில் படித்த 18 வயதான அப்ரிடி என்ற வாலிபர் நின்று இருந்தார்.

அவரை பார்த்ததும் அந்த பெண் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுள்ளார். உடனே அந்த பெண்ணை கையை பிடித்து 'என்னை நீ மீண்டும் காதலிக்க வேண்டும். உன்னை என்னால் மறக்க முடியவில்லை' என்று கூறி கல்லூரியின் முன்பே கையைப்பிடித்து இழுத்து எனக்கு பதில் சொல்லுமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கையை விடு என்று கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அப்ரிடி அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து அந்த பெண் தேனாம் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கொளத்தூர் பொன்னிமேடு பகுதியை சேர்ந்த அப்ரிடியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்ரிடி கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

கடந்த 2018ம் ஆண்டு இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அப்ரிடி அறிவுறுத்தல்படி அந்த பெண் தனது வீட்டில் இருந்து சில நகைகளை கொண்டு வந்து கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகை மாயமானது குறித்து மகளிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, உடன் படிக்கும் மாணவன் அப்ரிடியிடம் நகைகளை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் மாணவன் அப்ரிடி மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி காவலர்கள் இரண்டு குடும்பத்தினரையும் நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அந்த பெண், அப்ரிடியிடம் பேசமால் இருந்து வந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அப்ரிடி தற்போது ராயப்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் போது அடிக்கடிபின் தொடர்ந்து தன்னை மீண்டும் காதலிக்க வேண்டும் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தொந்தரவு செய்துள்ளார்.

அதன்படிதான், நேற்று முன்தினமும் தேனாம்பேட்டையில் ராணி பயிலும் கல்லூரிக்கு நேரில் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். அதைதொடர்ந்து காவல்துறையினர் கல்லூரி மாணவன் அப்ரிடி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget