மேலும் அறிய

மயிலாடுதுறை: திருடுனா ராயல் என்ஃபீல்ட் தான்.. பைக் திருடனை தேடிப்பிடித்த போலீசார்

மயிலாடுதுறையில் ராயல் என்பீல்டு புல்லட் பைக்குகளை குறித்து வைத்து திருடும் ராயல் திருடனை தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அடுத்த கேணிக்கரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி நள்ளிரவு திருடு போனது. இதேபோல் அடுத்த இரண்டு நாட்களில் 3 நம்பர் புதுத்தெருவில் வசிக்கும் மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் என்பீல்டு   புல்லட் பைக் திருடு போனது. இச்சம்பவம் இரு ராயல் என்பீல்டு  பைக்குகள் காணாமல் போனதை அடுத்து இருவரும் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் தங்களின் பைக்குகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்திருந்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை குற்றப்பிரிவு காவலர்கள் துரித விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவான கட்சிகளை ஆராய்ந்தனர். அதில் பதிவாகியுள்ள காட்சிகளை  கொண்டு தீவிர விசாரணை செய்தனர். 

மயிலாடுதுறை: திருடுனா ராயல் என்ஃபீல்ட் தான்.. பைக் திருடனை தேடிப்பிடித்த போலீசார்

விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துத்குடி சிவன் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் புல்லட்டை திருடியது உறுதி செய்யப்படுள்ளது. மேலும் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வாகன திருட்டு, ஆடு, மாடுகள் திருட்டு, வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த வந்த மணிகண்டனை மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு மயிலாடுதுறை கிளைச்சிறை முன்பு மயிலாடுதுறை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான விதத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரைகளை பிடித்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் முன்னுக்கு பின்னாக பதிலளித்த ஒருவனை காவல்துறையினர் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் பணியில் விசாரணை மேற்கொண்டதில், தொடர்ச்சியாக ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகளை திருடிய மணிகண்டன் என்பது தெரியவந்தது.  

மயிலாடுதுறை: திருடுனா ராயல் என்ஃபீல்ட் தான்.. பைக் திருடனை தேடிப்பிடித்த போலீசார்

அதனையடுத்து மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் திருடப்பட்ட ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகள் ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டியில் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற மயிலாடுதுறை காவல்துறையினர் இரண்டு புல்லட்டு பைக்குகளையும்  பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இரண்டு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகளும் உரிய விசாரணைகளுக்கு பின் நீதிமன்ற நடைமுறைகளுக்கு பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என மயிலாடுதுறை காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர். ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்குகளை குறிவைத்து திருடிய ராயல் திருடனை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் புல்லட் பைக் வைத்திருப்பவர்கள் மத்தியில் அச்சத்தை போக்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget