‛தீபாவளி’ சீட்டுக்கு ஆள் சேர்த்து ‛பொங்கல்’ வைத்த தம்பதி; ரூ.30 கோடியுடன் தலைமறைவு!
கிருஷ்ணகிரி அருகே ஏல சீட்டை நடத்தி 30 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்கண்கானிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பழைய மத்திகிரி பகுதியில் பொதிகை நகரில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் வயது (48) , இவர் டிவிஎஸ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி லதா வயது (40) இருவரும் இணைந்து வீட்டிலியே சுமார் 15 வருட ஆண்டுகளாமாக ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மனைவி லதா 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை சீட்டு நடத்த தொடங்கியுள்ளார். தீபாவளிக்கு பணம் தருவதாக கூறி சீட்டிற்கு ஆட்கள் பிடித்து வந்துள்ளாராம். இதனிடையே இவர்களிடம் பலரும் மாதந்தோறும் சீட்டுபணம் செலுத்தி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக சீட்டு பணம் சரியாக வழங்கப்பட்டதால் பரிந்துரையின் பேரில் சுமார் 300 நபர்களுக்கும் அதிகமானோர் தற்போது சீட்டு பணம் மாதந்தோறும் கட்டி வந்துள்ளனர்.
அதன் பின்னர் சீட்டு கட்டியவர்களுக்கு மாதம் தோறும் சீட்டு விழுந்தவர்களிடம் பழங்காமல் காரணங்களை கூறி வந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா 2வது அலை காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இந்த ஊரடங்கை காரணம் காட்டி சீட்டை எடுத்தவர்களுக்கு பணம் தர மீண்டும் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது...
சீட்டை நடத்தி வந்த லதா என்பவருக்கு சில நாட்கள் முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் கணவர் ரவிசந்திரன் சீட்டு கட்டியவர்களிடம் பணத்தை என்னுடைய மனைவி சரியான பின்பு அனைவருக்கும் வழங்கப்பட்டும் என தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில கடந்த ஞாயிறு கிழமை முதல் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு சீட்டு கட்டியவர்கள் சென்று பார்த்த பொதுவீடு பூட்டிய நிலையில் இருந்ததை கண்டு பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் ராமச்சதிரனையும்,லதா அவர்களை தொடர்பு கொண்டபோது அவர்களின் தொலைபேசியை சுப்ஆப் செய்துள்ளதாக, வந்துள்ளது அதன் பிறகு வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளர் அவர்கள் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் இவர்களின் உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை தம்பதியனர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சீட்டு பணம் செலுத்தி வந்தோரில் 100க்கும் அதிகமானோர் திரண்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜாஷ்வி அவர்களிடம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பதிக்கப்பட்ட எங்களின் பணத்தை திருப்பி பெற்று தரக்கோரி புகார் மனுவை அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல்கண்கானிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று கூறினார்.
சீட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது என்பதால் இதுவரை வந்தவர்களிடம் மட்டும் சுமார் ரூ25 கோடி முதல் 30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.