மேலும் அறிய
Advertisement
Crime: மதுரையில் கஞ்சா கடத்தல்; 20 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - சொத்துக்களை முடக்க நடவடிக்கை !
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்ட 20 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் - சொத்துக்களை முடக்க நடவடிக்கை.
தென்மண்டல ஜி.ஜியாக அஸ்ராகார்க் பொறுப்பேற்ற நிலையில் மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுடைய சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா விற்பனை குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்ட 20 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் சொத்துக்களை முடக்க நடவடிக்கை. மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களில் கஞ்சா வியாபாரம் நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை தென்மண்டல ஐஜி அஷ்ரா கார்க் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
— Arunchinna (@iamarunchinna) July 13, 2022
முதற்கட்டமாக தென்மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகளின் 1,238 வங்கி கணக்குகளையும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர் நடவடிக்கையாக மதுரை மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் கோரிப்பாளையம் ஜாம்புரோபுரத்தில் 1.250 கஞ்சாவுடன் அப்பகுதியை சேர்ந்த கிஷோர் 20, தெற்குவாசல் மணிகண்டன் 19, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் வியாபாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்.
மேலும் அவர்களது சொத்துக்களை முடக்க துணை ஆணையர் தலைமையில் குழு அமைத்தும் மாநகர காவல் ஆணையா் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மதுரையை தொடர்ந்து கஞ்சா விற்பனை தடுக்க தமிழகம் முழுவதிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion