மதுரையில் போலி ஆதார் கார்டு மூலம் நில மோசடி- ஊராட்சி மன்ற தலைவர் மீது கிராம மக்கள் புகார்
போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி இவருக்கு சொந்தமான 31 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்ற தலைவர் கோசிமின் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை ஒச்சம்மாள் என்ற பெயரில் போலியாக ஆதாரை மாற்றி உசிலம்பட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரம் பதிவு செய்துள்ளார். இதே போல் ஊரில் பல பேரின் ஆதாரை மோசடியாக பயன்படுத்தி இடத்தை பதிவு செய்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி கிராம மக்கள் மனு அளித்தனர்.
மதுரை உசிலம்பட்டி பகுதியில் உள்ள திம்மநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கோசிமின் என்பவர், கிராமத்தில் உள்ள பல்வேறு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாக கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
— Arunchinna (@iamarunchinna) July 11, 2022
Further reports to follow - @abpnadu #madurai pic.twitter.com/mF0gscrQpd
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்