மேலும் அறிய
Advertisement
மதுரை : நள்ளிரவில், வைகை ஆற்றுப்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது !
மானாமதுரை காவல்துறையினர் சுதந்திர தினத்தன்று சிவகங்கை எஸ்.பியிடம் பாராட்டுப் பெற்ற நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடித்தது பொதுமக்களிடம் பாரட்டைப் பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மானாமதுரையில் உள்ள ஒரு குளிர்பானம் விற்பனை அங்காடியில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மானாமதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கணேசனிடம் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். கணேசன் பணம் தர மறுத்ததால் கணேசனின் தலை, முகம் ஆகிய பகுதியில் கொடூரமாக வெட்டி உள்ளனர்.
கணேசனை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டுவதை கண்ட அவரது நண்பர்கள் இருவரும் பயந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து கணேசன் தனது கைபேசி மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து பலத்த காயத்துடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் பலத்த காயமடைந்த கணேசனை சிவகங்கை அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி சுந்தர மாணிக்கம் தலைமையில் இரவில் தனிப்படை அமைத்து குற்றபிரிவு காவலர்கள்,மானாமதுரை நகர் காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் மற்றும் எஸ்.ஐ முருகானந்தம் எஸ்.ஐ திருமுருகன் காவலர்கள் ராஜா, நாகராஜ், கோகுல் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது குற்றவாளிகள் ரயில்வே காலணி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது மானாமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கிளங்காட்டுர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அமர்நாத் வயது17, ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் 21,ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த ரவி மகன் நாணி 17,ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சபரி 18,ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் மீனாட்சி சுந்தரேஸ்வரன் 17,பார்திபனுர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரவின் 21,பரமக்குடியை சேர்ந்த பாண்டி மகன் ராஜா 21,மதுரையை சேர்ந்த ராஜ் மகன் அருள் ராஜ் 19,பரமக்குடியை சேர்ந்த அமீர் அப்துல் மகன் முகமது கலில் 17 பரமக்குடியை சேர்ந்த வேலு மகன் அஜித் 22,ஆகியோர் சேர்ந்து வைகை ஆற்று பலத்தில் வழிப்பறி சம்பவத்தில் ஈடு பட்டது தெரிய வந்தது அஜித் மற்றும் பிரவின் ஆகியோர் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற செயல்கள் நிலுவையில் உள்ளது இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
மானாமதுரை காவல்துறையினர் சுதந்திர தினத்தன்று சிவகங்கை எஸ்.பியிடம் பாராட்டுப் பெற்ற நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் குற்றவாளிகளை விரைவாக பிடித்தது பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion