தீயசக்தியை விரட்டுவதாக கூறி பெண் பாலியல் வன்கொடுமை; மூன்று சாமியார்கள் கைது!
தீய சக்திகளை விரட்டுவதாக ஏமாற்றி மும்பை பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே ராஜ்கோட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒரு சாமியார் கைது.
ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோவிலின் 27 வயது பூசாரி 37 வயதான பெண்ணை "அவரது கஷ்டங்களை தீர்த்துவைப்பதாக" கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். "அகோரி ஆத்மா" வில் இருந்து விடுபட உதவுவதாக கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பையை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்திய இதுபோன்ற வழக்குகளில் இவர் மூன்றாவது ஆள் என்று போலீசார் தெரிவித்தனர். ராஜ்கோட்டைச் சேர்ந்த மஹந்த் கவுதம்கிரி கோசாய் மற்றும் சுவாமி பிரணவானந்த் சுக்லா மற்றும் மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் ஜோஷி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 9 அன்று சுக்லா மற்றும் ஜோஷி கைது செய்யப்பட்ட நிலையில், கோசாய் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
போலீசாரை அணுகிய மும்பையை சேர்ந்த பெண், பல ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் கூறி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள், பிளாக் மேஜிக் சட்டம், 2013 ஆகியவற்றின் கீழ் கற்பழிப்பு மற்றும் மோசடி செய்ததாக அந்த சாமியார்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அந்த பெண்ணிடம் "அகோரி ஆத்மா" இருப்பதாக கூறி நம்ப வைத்ததாகவும், அதிலிருந்து விடுபட அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் கூறினர். அந்த பெண், போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 2002 ல் திருமணம் செய்து கொண்டதாகவும், 2003 ல் கணவரை பிரிந்ததாகவும் கூறினார். "2009 ல் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். தனக்கும் கணவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதால், அவர் பல சாமியார்களை அணுகியுள்ளார், சுவாமி பிரணவானந்த் சுக்லா, 2011 ல் ஒரு தீர்வை தருவதாக கூறினாராம்." என்று ஒரு அதிகாரி கூறினார்.
"அவள் தீய சக்திகளால் சூழப்பட்டு இருப்பதாகவும், அந்த தீய சக்தியிலிருந்து விடுபடவும், அவள் சுக்லாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது." இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் சுக்லாவால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒரு தொழிலதிபர் அவளுக்கு உதவ முன்வந்ததாகவும், அவளது துயரத்தை கேட்டபின் அவளுக்கு ரூ. 35 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த பணத்தையும் சுக்லா எடுத்துச் சென்றதாகவும் போலீசார் கூறினர். அந்தப் பெண் சுமார் 10 வருடங்களாக அந்த சாமியார்களின் துஷ்பிரயோகத்தை சகித்துக் கொண்டாலும் தனது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்ந்தபோது, ஆகஸ்ட் மாதம் அவர் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது மீதமிருந்த ஒருவரும் கைதாகி உள்ளார்.