காஞ்சனா 3ல் நடித்த நடிகை கோவாவில் சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!
காஞ்சனா 3 ல் நடித்த நடிகை அலெக்ஸான்ட்ரா ஜாவி கோவாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த தமிழ் திரைப்படமான காஞ்சனா 3 யில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்த, ரஷ்யாவை சேர்ந்த மாடல் அலெக்ஸாண்ட்ரா ஜாவி, கோவாவின் சியோலிமில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா தற்கொலையா என்ற ரீதியில் கோவா போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
2019ல் பாலியல் துன்புறுத்தலுக்காக சென்னையில் ஒரு புகைப்படக்காரர் மீது புகார் அளித்தபோது சிறிது நாட்கள் பலராலும் பேசப்பட்டுவந்தார். ரஷ்யாவை சேர்ந்த 24 வயதான நடிகை அலெக்ஸாண்டரா ஜாவி தனது வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகித்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
தமிழில் ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தில் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் பேயாக வந்து பழிவாங்கும் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். அவர் பல வருடங்களாக இந்தியாவில் செட்டில் ஆகி இருந்தார். அவர் தங்கியிருந்த வடக்கு கோன் கிராமத்தில் உள்ள உள்ளூர் கிராம வாசிகள் சிலரிடம் விசாரணை நடத்தியதில், சில நாட்களுக்கு முன்பு அவளது காதலன் தன்னை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஜாவி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார்கள்.
கோவாவில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்தவரின் குடும்ப பிரதிநிதியின் ஒப்புதல் வந்து அடைந்தவுடன் விரைவில் பிரேத பரிசோதனைகாண செயல்பாடுகள் மேற்கொண்டு நடத்தப்படும் என்றார்கள்.
ஜாவி தன் காதலருடன் கோவாவில் தங்கியிருந்ததாகவும் அவர் வெள்ளிக்கிழமை அவரது அறையில் கதவை மூடிய நிலையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். அவள் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சுட்டிக்காட்டினாலும், மேற்கொண்டு ஆக்ஷன் எடுப்பதற்கு முன்பாக ஆய்வாளர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். மேலும் மருத்துவ செயல்பாடுகள் மற்றும் சட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள முறையான பிரதிநிதியை நியமிக்குமாறு கோவா காவல்துறை ரஷ்ய தூதரகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது. அவர்களிடமிருந்து முறையான பதில் வந்த உடன் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நடிகை மற்றும் மாடலான அலெக்ஸான்ட்ரா ஜாவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் பிற சம்பிரதாயங்கள் ரஷ்ய தூதரகத்தால் கவனிக்கப்படுகின்றன. அவரை யாரேனும் கொலை செய்து தற்கொலை போல தோற்றமளிக்க செய்திருக்கிறார்களா என்பதை அறிய மேலும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவளை பிளாக்மெயில் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சென்னைக்காரரும் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.