மேலும் அறிய
’டீக்கடை ஷட்டர்’ ’200 வழக்குகளில் ட்ரிக்..’ ‘துணை நடிகைகளுடன் தொடர்பு’ : வாக்குமூலம் கொடுத்த பிரபல கொள்ளையன்..!
200-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் திருடி உள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரித்ததில் பல தகவல்கள் தெரியவந்தது.

கைது
தமிழகம் முழுவதும் 70 காவல் நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் கடந்த மாதம் 2-ஆம் தேதி சீனிவாசா ஸ்வீட்ஸ் என்ற கடையில் கடையின் பூட்டை உடைத்து 22 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது. இது குறித்து கடையின் உரிமையாளர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் இருந்த சி.சி.டிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பதிவுகளை பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட சி.சி.டிவி கேமராவில் பதிவான நபர் குறித்து விவரங்களை சேகரித்தனர்.
இதில் பல காவல் நிலையங்களில் இருந்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சி.சி.டி.வி கேமராவில் உள்ள நபர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 54) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது தமிழகம் முழுவதும் பல குற்ற வழக்குகள் குறிப்பாக திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து இவரை பிடிக்க கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்தனர்.
அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த 28-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சென்று அங்கு வைத்து காளிதாசை கைது செய்தனர். காளிதாசை கொளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் விசாரணை யில் தமிழகம் முழுவதும் சுமார் 70 காவல் நிலையங்களில் காளிதாஸ் மீது வழக்குகள் உள்ளதாகவும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் திருடி உள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரித்ததில் பல தகவல்கள் தெரியவந்தது.
பெரும்பாலும் அவன் டீ கடைகளில் அதிகமாக திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளான். ஏனென்றால் குறைந்தபட்சம் அந்த கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் இருக்கும். அதனால் டீக்கடையில் திருடினா போதும் சார், வெளியில் செல்லமாட்டார்கள் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அப்படி புகார்கள் கொடுத்தாலும் போலீசார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் கள். எனவே இதுவரை நூற்றுக் கும் மேற்பட்ட டீக்கடைகளில் திருடி உள்ளதாகவும் ஆனால் பெரும்பாலானோர் புகார் கொடுக்க முன் வருவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஷட்டர் கதவு போன்றவற்றை உடைத்து திருடுவதில் கைதேர்ந்த காளிதாஸ் திருடிய பணத்தில் துணை நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார். இவ்வாறு பல வழக்குகளில் தொடர்புடைய காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்த கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















