பரமக்குடியில் நடந்த கொள்ளை; தீரன் திரைப்படக்காட்சியை கண் முன் நிறுத்திய சம்பவம்: கொள்ளையரை பிடித்த தமிழ்நாடு காவல்துறை..!
திருடனின் கை ரேகைகளை பதிவு செய்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேடி வந்த நிலையில், ஆதார் கார்டு மூலம் முகவரியை கண்டுபிடித்தனர்.
![பரமக்குடியில் நடந்த கொள்ளை; தீரன் திரைப்படக்காட்சியை கண் முன் நிறுத்திய சம்பவம்: கொள்ளையரை பிடித்த தமிழ்நாடு காவல்துறை..! Ramanathapuram Northern State Robber Arrested police take action - TNN பரமக்குடியில் நடந்த கொள்ளை; தீரன் திரைப்படக்காட்சியை கண் முன் நிறுத்திய சம்பவம்: கொள்ளையரை பிடித்த தமிழ்நாடு காவல்துறை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/02/7313418c237daa8c694c9784b5347b3c1709358367342113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் சில புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து வீட்டிற்குள் இருக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ராஜஸ்தான் மாநிலத்தில் போய் பதுங்கி இருக்கும், கொள்ளையர்களை சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் குழுவாகச் சென்று, பல சிக்கல்களை சந்தித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, அவர்களை கைது செய்து இங்கு அழைத்து வருவது போல் 'தீரன்' என்ற திரைப்படத்தில் காட்சிகள் வரும். இந்த காட்சியை கண் முன் நிறுத்துவது போல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள கொள்ளையனை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று அதிரடிதியாக கைது செய்து திரும்பி உள்ளது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அணிகேட் ராம்பிரோஸ் என்பவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டட வேலைக்காக வந்துள்ளார்.அங்கு (பரமக்குடி) அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று தனியாக கிளினிக் நடத்தி வரும் கிருஷ்ணவேணி என்பவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட ராம்பிரோஸ், வீட்டிற்குள் புகுந்து கிருஷ்ணவேணியின் கை கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 37 சவரன் நகை மற்றும் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளார்.
அங்கு (பரமக்குடி) அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று தனியாக கிளினிக் நடத்தி வரும் கிருஷ்ணவேணி என்பவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட ராம்பிரோஸ், வீட்டிற்குள் புகுந்து கிருஷ்ணவேணியின் கை கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 37 சவரன் நகை மற்றும் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணவேணி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். திருடனின் கை ரேகைகளை பதிவு செய்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேடி வந்த நிலையில், ஆதார் கார்டு மூலம் முகவரியை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் ஐந்து காவலர்கள் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த இடத்தில் தீரன் திரைப்படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. பரமக்குடியில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்திற்கு 3000 கிலோமீட்டர் கடந்து சென்று ஒரு வாரம் தங்கி பெரும் முயற்சி எடுத்து பதுங்கி இருந்த திருடன் அணிக்கேட் ராம்பிரோஸை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்பொழுது அவருடைய உறவினர்கள் காவலர்களை சுற்றி வளைத்தனர். அப்பொழுது அவுரங்கபாத் பகுதி காவலர்களின் உதவி இவர்களுக்கு கிடைக்க, தமிழக காவல்துறையினர் திருடன் அணிகோட் ராம்பிரோச் உடன் கார் மூலம் பரமக்குடிக்கு வந்தனர். பின் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு ராமநாதபுரம் சிறைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் வாகனத்தில் ஏறும்போது திருடன் காலில் விழுந்து கதறி அழுதிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)