Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!
புதுச்சேரி: உடனடி கடன் (instant loan app) செயலி மூலம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நபரிடம் இரண்டு லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வசூலித்து மேலும் பணத்தை கேட்டு புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்
புதுச்சேரி : உடனடி கடன் (instant loan app) செயலி மூலம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நபரிடம் இரண்டு லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வசூலித்து மேலும் பணத்தை கேட்டு அவருடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய இணைய வழி மோசடிக்காரர்கள் மீது புதுச்சேரி இணை காவல்துறை வழக்கு பதிவு
புதுச்சேரி அரசு மருத்துவ குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் அரசு ஊழியர் அந்தோணி ராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடனடி செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவருடைய செல்போனிலிருந்து ஏதாவது கடன் கிடைக்கின்ற கடன் கொடுக்கின்ற செயலிகள் இருக்கின்றதா என தன்னுடைய ப்ளே ஸ்டோர் மூலம் தேடி இருக்கிறார். அப்போது அவருக்கு கிரெடிட் 40, போன்ற பல்வேறு செயலிகள் இருந்துள்ளது. அதில் ஒரு ஆப்பில் உடனடியாக எந்த வெரிஃபிகேஷனும் இல்லாமல் உங்களுக்கு லோன் தருகிறோம் என்று இருந்ததை நம்பி இவருடைய ஆதார் கார்டு மற்றும் இவர் செல்பி எடுத்து அனுப்பிய ஒரு புகைப்படத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அவருக்கு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை உடனடியாக லோன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அவருடைய வங்கி கணக்கு வெறும் 7000 ரூபாய் மட்டுமே வந்துள்ளது.
மேலும் லோன் கொடுப்பதற்கு முன்பாக அவர்கள் போட்ட ஒரே ஒரு கண்டிஷன் உங்களுடைய தொலைபேசியில் இருக்கின்ற அனைத்து செல்போன் விவரங்களை நாங்கள் எடுத்துக் கொள்ள அனுமதித்தால் மட்டுமே உங்களுக்கு கடன் உதவி செய்வோம் என்று கூறி இருக்கின்றனர். மேலும் அந்தோணி ராஜ் உடைய வங்கி விவரங்கள் ஆதார் கார்டு புகைப்படம் ஆகியவற்றை அவர்களுடைய ஆப்பிலேயே அப்லோட் செய்ய சொல்லி இருக்கின்றனர். தன்னுடைய தொலைபேசி எண்ணின் விவரங்கல் கேட்டதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்தோணி ராஜ் அதற்கு ஒத்துக்கொள்ளவே 15 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று 7000 ரூபாய் மட்டுமே அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். மேலும் இந்த தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் ஒரு வாரத்தில் 7000 ரூபாயை பணத்தை செலுத்திய பிறகு உங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளோம் அதை முழுவதும் செலுத்த வேண்டும் என மிரட்ட ஆரம்பித்தனர்.
அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்தோணி ராஜ் செல்போனுக்கு சற்று நேரத்திலே அவர் செல்பி எடுத்து அனுப்பிய புகைப்படத்தையும் மற்றும் அவர் வாட்ஸப்பில் முகப்பு படமாக வைத்திருந்த படத்தையும் எடுத்து ஆடை இல்லாமல் மார்பிங் செய்யப்பட்டு அவருக்கு அனுப்பி இதே புகைப்படத்தை உங்களுடைய காண்டாக்ட் லிஸ்டில் இருக்கின்ற அனைவருக்கும் அனுப்பி விடுவோம் என்று மிரட்டவே அரசு ஊழியரான அவர் பயந்து உடனடியாக பதினைந்து ஆயிரம் ரூபாய் பணத்தை மேற்கண்ட ஆப்பிற்கு செலுத்தி விடுகிறார். 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டுவதற்கு அவரிடம் உடனடியாக பணம் இல்லாததால் அதேபோல் ப்ளே ஸ்டோரில் சென்று வேறு ஒரு புதிய உடனடி லோன் ஆப்பிள் பணத்தை கடனாக பெறுகிறார்.
அவர்களும் அதே போன்று மிரட்டவே 2 லட்சத்தி 81 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பிய பிறகும் தொடர்ந்து மிரட்டவே இன்று காவல் நிலையம் வந்து அவர் எந்தெந்த ஆப்பிள் லோன் எடுத்தார் எவ்வளவு பணம் திரும்ப செலுத்தி உள்ளார் எவ்வளவு தொலைபேசி எண்ணில் இருந்து அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. மேலும் அவருடைய மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்ததன் பேரில் இன்று இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால் இதுபோன்ற உடனடி மொபைல் ஆப்பிள் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.
பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பிள் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் இணைய வழி காவல் துறை கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் தெரிவிக்கின்றார்