மேலும் அறிய

உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற்ற நபரை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலுக்கு தன்னுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை செயலி பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.

புதுச்சேரி: உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற்ற நபரை ஆபாசமாக சித்தரித்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி அதிக பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த நபர் இன்ஸ்டாகிராமில் வந்த உடனடிக் கடன் செயலி விளம்பரத்தை பார்த்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலுக்கு தன்னுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை செயலி பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்பு ரூபாய் 5000 அந்த செயலி மூலம் கடன் பெற்றுள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பெற்ற 5000 கடன் தொகைக்கு அந்த செயலியில் இருந்து பேசிய நபர் ரூபாய் 20000 கட்டுமாறு கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஐந்தாயிரம் மட்டுமே கடன் பெற்றதாக கூறியுள்ளார். அந்த செயலில் இருந்து பேசிய நபர் ரூபாய் 20000 கட்டவில்லை என்றால் அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

பயந்து போன அந்த நபர் ரூபாய் 20 ஆயிரத்தை கட்டி உள்ளார். மேலும் 10,000 கட்ட வேண்டும் என்று அவர்கள் மிரட்டி உள்ளனர். இவர் மறுக்கவே இவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இவருடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி மிரட்டி பணம் கேட்டு உள்ளார். இது சம்பந்தமாக அந்த நபர்  இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

இது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கூறுகையில்...

இணையதளங்களில் வரும் போலியான உடனடி கடன் பெரும் செயலி விளம்பரங்களை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம். மேலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்வதால் தங்களுடைய மொபைலில் உள்ள நண்பர்கள் தொலைபேசி எண் மற்றும் புகைப்படங்களை அவர்கள் திருடி விடுவார்கள். மேலும் அந்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று பணம் கேட்டு மிரட்டுவார்கள். மேலும் கடந்த ஐந்து நாட்களில் இதுபோன்று 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரித்து வருகின்றனர் என்று பொதுமக்களுக்கு அவர் எச்சரித்துள்ளார். புகார் தெரிவிக்க: 1930 மற்றும்  www.cybercrime.gov.in

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கடலூரில் நண்பர் கொலை - சப்-இன்ஸ்பெக்டரை வெட்டியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்
கடலூரில் நண்பர் கொலை - சப்-இன்ஸ்பெக்டரை வெட்டியவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்
"என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்" - எடப்பாடியில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
"போராட்டம் அவசியமானது, ஆனால் போராடும் இடம் தவறானது" - சமூக ஆர்வலர் வேதனை..
"போலீசாருக்கே இந்த நிலையா?" - போதை ஆசாமிகள் வெறிச்செயல்... படுகாயமடைந்த அதிகாரிகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
Embed widget