ஆர்யன் கான் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. லஞ்சம் வாங்கியதா என்.சி.பி? நடந்தது என்ன?
வழக்கின் முக்கிய சாட்சியமான கே.பி.கோசவியுடன் இருந்த பாதுகாவலர் பிரபாகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ரூ.8.லட்சம் இந்த வழக்கில் லஞ்சமாகப் பெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை சொகுசுக் கப்பல் போதைப் பொருள் வழக்கில் வழக்கின் சாட்சியத்திடம் வெற்றுத்தாளில் கையெழுத்து பெறப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு வாரியத்தின் மீது புகார் எழுந்துள்ளது. வழக்கின் சாட்சியமான பிரபாகர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் சாட்சியம் இதுகுறித்து பொதுவெளிகளில் பகிரக்கூடாது எனவும் நீதிமன்றம் முன்பு மட்டுமே இதுகுறித்துப் புகார் அளிக்க வேண்டும் என்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Witnes in #AryanKhan case made to sign on blank paper by NCB is shocking. Also thr r reports that thr ws demnd of huge money .CM UddhavThackeray said tht ths cases r made 2 defame Mah'shtra.Ths seems 2b comng tru @Dwalsepatil
— Sanjay Raut (@rautsanjay61) October 24, 2021
Police shd tk suo moto cognizance@CMOMaharashtra pic.twitter.com/zipBcZiRSm
மேலும், வழக்கின் முக்கிய சாட்சியமான கே.பி.கோசவியுடன் இருந்த பாதுகாவலர் பிரபாகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ரூ.8.லட்சம் இந்த வழக்கில் லஞ்சமாகப் பெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். லஞ்சம் தொடர்பான விவாதத்தை கே.பி.கோசவி கேட்டதாகவும். அதனால்தான் அவர் தற்போது உயிர் அச்சத்தின் காரணமாகத் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரபாகரின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பாகி வருவதை அடுத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர அரசின் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறியுள்ளார்.
As Prabhakar, witness in Aryan Khan & others case has raised bribery allegations, the said affidavit has been forwarded to DG,NCB for “further necessary action”.
— Arvind Gunasekar (@arvindgunasekar) October 24, 2021
Options before DG,NCB is to order dept enquiry or forward the case to CBI.
Will MH Police register FIR before that ? pic.twitter.com/ltOlZrpVUl
முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தொடர்ந்து விசாரணையில் உள்ளார். இதற்கிடையே கைதின்போது ஆர்யன் கானின் போனை கைப்பற்றிய காவல்துறை அவரது போனில் போதைப் பொருள் வாங்கியது தொடர்பான உரையாடல்கள் இருப்பதாகத் தெரிவித்தது. 2018-19 காலக்கட்டத்தில் நடிகர் அனன்யா பாண்டேவுடன் ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பான மொபைல் உரையாடலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் அதில் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்திருந்தது.
இதையடுத்து அனன்யா பாண்டேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் அவர் தான் எந்தவித போதைப்பொருளும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் யாருக்கும் சப்ளை செய்யவும் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் ரேவ் பார்டி நடைபெற உள்ளதாகவும் இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்த உள்ளதாகவும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மாறுவேடத்தில் சொகுசு கப்பலில் ஏறிய என்சிபி அதிகாரிகள், அங்கு ம் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதை உறுதி செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கைவிருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.ஜாமீன் மனு மீதான உத்தரவை அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அக். 15 தொடங்கி அக். 19 வரை அடுத்த நான்கு நாட்கள் துர்கா பூஜை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும். இதனால் வழக்கு விசாரணையை அக். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த விசாரணை முடிந்ததும் தனது தாய் கௌரியுடனும் தந்தை ஷாருக்கானுடனும் விடியோ காலில் பேசியிருக்கிறார் ஆர்யன் கான். ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கானுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.