Crime: ரயிலில் 2 கிலோ தங்க நகை! சுத்து போட்டு பிடித்த ரயில்வே போலீசார்!
சோழன் விரைவு ரயில் ஆவணங்கள் இன்றி 2 கிலோ தங்க நகை கொண்டு இருவரை சுற்றி வளைத்து போலீஸ் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில் மூலமாக ஆவணங்கள் இல்லாமல் , தங்க நகைகளை கொண்டு செல்லும், சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு வழியாக ரயிலில் தங்க நகைகள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதால், ரயில்வே போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
முன்
குற்றங்களை தடுப்பதற்காக கடந்த மாதம் 09 ஆம் தேதி ஒரு தனி படை மூலம் தொடர்ந்து சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால், பல்வேறு குற்ற சம்பவங்கள் குறைந்தன. தனிப்படை மூலம் சோதனை நடத்தியதில் 13 கிலோ கஞ்சா பிரிக்கப்பட்டது. அதேபோன்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ,ஈடுபட்டிருந்த பொழுது இன்று காலை சென்னையில் இருந்து, சோழன் எக்ஸ்பிரஸ் வண்டியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது எஸ்1 ( S1 ) என்ற பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில், இருவர் சுற்றி திரிந்துள்ளனர். தொடர்ந்து, இருவரிடமும் போலீசார் விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அளித்தனர். இதனை அடுத்து தனி படை போலீஸ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், உள்ள ரயில்வே போலீஸ் அலுவலகத்தில் அவர்களை அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அவர்கள் கொண்டு வந்த இரண்டு பைகளில் , ஏராளமான , தங்க மோதிரங்கள், நெக்லஸ் , வளையல்கள் ஆகிய தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். ரயிலில் பயணித்த சவுகார்பேட்டை பகுதியியை சேர்ந்த அமித் பி .ஜெயின் கொண்டு வந்த 1708.42 கிராம் தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். அதேபோன்று சௌகார்பேட்டை பகுதியை சேர்ந்த ராம்லால், கொண்டு வந்த 195 கிராம் தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர் இவற்றின் மதிப்பு சுமார் 1 கோடியே 2 லட்ச ரூபாய் இருக்கும் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வணிகவரித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு தங்க நகைகளை பிடித்த போலீசாருக்கு ரயில்வே துறை துணை காவல் கண்காணிப்பாளர் ராசையா வாழ்த்துக்களை தெரிவித்தார்.