மேலும் அறிய
‘க்யூ ஆர்’ மோசடி.. பணம் அனுப்புகிறார்களா உஷார்.. முன்னாள் ஊர்காவல் படை ஊழியர் கைதான பின்னணி..!
சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் கியூஆர் கோடு மூலம் மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் கியூஆர் கோடு மூலம் மோசடியில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.
செல்போனில் பயன்பாடுகள் அதிகமானதை தொடர்ந்து, மொபைல் பேங்கிங் என்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. யுபிஐ மூலம் நேரடியாக பணம் செலுத்த முடியும் என்பதால் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களை பொதுமக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனை வைத்து பல நூதன மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக துரைப்பாக்கத்தில் நடைபெற்றுள்ள மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(39). இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சென்னை புறநகர் பகுதி என்பதால் ஏராளமான ஐடி ஊழியர்கள் அவருடைய டிபன் கடையில் சாப்பிடுகின்றனர். பெரும்பாலான ஊழியர்கள் ஆன்லைன் மூலமாக ட்ரான்ஸ்லேஷன் செய்ய விரும்புவதால், கணக்குடன் இணைக்கப்பட்ட க்யூ ஆர் ( QR ) ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டி வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக வாடிக்கையாளர்கள் அனுப்பும் தொகை வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பதாகவும், மோசடி நடப்பதாகவும் கூறி உரிமையாளர் ஆனந்த், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தேதி புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், டிபன் கடையில் ஒட்டி வைத்திருந்த க்யூ ஆர் ( QR code ) ஐ ஸ்கேன் செய்து சிறிய தொகையை அனுப்பியுள்ளனர். அப்போது உரிமையாளர் ஆனந்த் உடைய வங்கி கணக்கிற்கு பணம் செல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், பணம் சென்ற வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது ஸ்ரீதர் என்பவருடைய வங்கி கணக்கிற்கு பணம் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கண்ணகி நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் (21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்காவல் படையில் பணியாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீதர் மீது மோசடி, போலி ஆவணத்தை புனைதல், ஐடி பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். மோசடி செய்ய பயன்படுத்திய க்யூ ஆர் கோடுயையும் பறிமுதல் செய்த காவல்துறையினர்.
தற்காத்து கொள்வது எப்படி ?
தற்பொழுது பெரும்பாலான இடங்களில் ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை நடைபெறுவதால் முறையான நபருக்கு தான் அனுப்புகிறோமா என்பதை உறுதி செய்து விட்டு பணம் அனுப்ப வேண்டும். அதேபோல் இப்பொழுது பணம் வந்தால் பணம் வந்து விட்டது என வாய்ஸ் மெசேஜ் மூலம் தெரிவிக்கும் கருவிகள் உள்ளது. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம், இதுபோக பணம் அனுப்பப்படும் ஆப்கள் பணம் ரிசீவ் ஆகிவிட்டது என மொபைலில் உடனடியாக , தெரிவிக்கும் வசதியும் உள்ளது. எனவே இவற்றை பயன்படுத்துவது வியாபாரிகளுக்கு நல்லது என தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion