மேலும் அறிய

Peacock Curry: மயில் கறி சமைப்பது எப்படி? வீடியோ போட்ட YouTuber...!கடைசியில் ட்விஸ்ட்..!

Peacock Curry Video யூடியூப்பில் அதிக வியூஸ்-க்கு ஆசைப்பட்டு மயில் இறைச்சி சமைக்கும் வீடியோ வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்திய நாட்டின் தேசியப் பறவையான மயிலின் இறைச்சியை சமைத்து, யூடியூப்பில் வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

மயில் இறைச்சி வீடியோ:

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம் தங்கல்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடம் பிரனய்  குமார். இவர் , யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது, வியூஸ்காக வீடியோக்களை போடுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் போட்ட வீடியோவானது பெரும் வைரலான நிலையில்,  தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் , தேசிய பறவையான மயில் கறியை  எப்படி சமைப்பது என காட்சிப்படுத்தியிருக்கிறார்.  மேலும், இறைச்சியை அவர் சாப்பிடுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோவானது, யூடியூபில் பெரும் வைரலானது, இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Also Read: திண்டிவனத்தில் பதற்றம்... 18 வயது மாணவனை கத்தியால் கழுத்தை கிழித்த திமுக நிர்வாகி...

கைது:

இந்த தருணத்தில், இந்த வீடியோவானது காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, உடனடியாக நபரை கண்டறிந்து, காவல்துறையினர் கைது செய்தனர்.  பிரனய் குமார் என்ற அடையாளம் கண்டறியப்பட்ட நபர் மீது, தற்போது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், சமைக்கப்பட்ட மயில் இறைச்சி, யூடியூபரின் ரத்த மாதிரிகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.

மயில் கறி சாப்பிட்டது உறுதி செய்யப்படால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசியில் ட்விஸ்ட்:

இந்நிலையில், கடைசி நேரத்தில் ட்விஸ்ட் நடந்துள்ளது. அது என்னவென்றால், இறைச்சியை சோதனை மேற்கொண்டதில், அது கோழி இறைச்சி என தெரியவந்துள்ளது. விசாரணையில், அவர் வீட்டருகே உள்ள கோழி இறைச்சி கடையில் வாங்கி சமைத்ததாக தெரிவித்துள்ளார். 

இவர், யூடியூபில் வியூஸ்க்காக மயில் கறி என பொய்யான  தகவலை கூறி சமைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளில் மயில் இருக்கிறது. விளைநிலங்கள், சில தருணங்களில் மக்கள் குடியிருப்புகள் அருகேயும் மயில் வருவதும் வழக்கம்.

மயில், நம் நாட்டின் தேசிய பறவையாக இருப்பதால், யாரும் அதை வேட்டையாடுவதில்லை. மேலும் , தேசிய பறவையாக இருப்பதால், வேட்டையாடுவது குற்றமாகும்.

Also Read: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்த என்ன ?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget