சென்னையை கலக்கிய பிரபல ரவுடி... என்கவுண்டரில் சுட்டுப்பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்.. நடந்த என்ன ?
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி, ரோஹித் ராஜன் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்
சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த ரோஹித் ராஜன் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
சென்னையும் ரவுடிகளும்
சென்னை மாநகரம் வளர்ச்சியை நோக்கி ஒரு புறம் பயணித்து வந்தாலும், மறுபுறம் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல வகைகளில் ரவுடிகள் அதிகரித்து வருவது காவல்துறையினருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நடைபெறும் ரியல் எஸ்டேட், பிரபல கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் பறிக்கும் நோக்கத்துடன் ரவுடி கும்பல்கள் உருவாகின்றன.
இதுபோன்று உருவாகும் ரவுடி கும்பல்கள், மாதம் மாமுல் வாங்குவது , கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது என பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றனர்.
ரவுடிகளுக்கு இடையே மோதல்
இவ்வாறு பணம் சம்பாதிப்பதிலும், தங்கள் ஏரியா எது, ரவுடிகளில் யார் பெரிய ரவுடி என காட்டிக் கொள்வதற்கு ரவுடிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த மோதலில் ஒரு ரவுடி மற்றொரு ரவுடியை கொலை செய்து, இதன் மூலம் பொதுமக்களை மிரட்டி அந்த பகுதியில் , தாதாவாக வளம் வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
தீவிர கண்காணிப்பில் போலீஸ்
காவல்துறையினரும் இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் குறித்த தகவல்களை அந்தந்த காவல் நிலையங்கள் கண்காணித்து வருகின்றன. இதன் மூலம் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பிலேயே இருந்து வருகின்றனர். அதிக குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் அவ்வப்போது குண்டர் தடுப்பு சட்டத்தையும் கைது செய்யப்படுகின்றனர். அப்படி இருந்தும் எப்படியாவது சிறையில் இருந்து, வெளிவரும் ரவுடிகள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபட தொடங்கி விடுவது காவல்துறையினருக்கு தலைவலியாக இருந்து வருகிறது.
தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் சரித்திரப்பதிவு குற்றவாளிகளையும் கைது செய்யும் பணியில் சென்னை மாநகர போலீசார் முடக்கிவிடப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ரோஹித் ராஜன் என்பவர் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடி ரோகித் ராஜன்
சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் ரோஹித் ராஜன் . ரோஹித் ராஜன் மீது மைலாப்பூர், சேத்துப்பட்டு, பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மயிலாப்பூரை சேர்ந்த ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் ரோஹித் ராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரோஹித் ராஜன் தென் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக தென் மாவட்டத்தில், போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது, ரோஹித் ராஜனை தேனியில் வைத்து கைது செய்து போலீசார் சென்னை கொண்டு வந்தனர்.
சுட்டுப்பிடித்த போலீஸ்
சென்னையில் டி.பி.சத்திரத்தில் காவலர்களை தப்பி செல்ல முடிகின்ற ரவுடி ரோஹித் ராஜனை சுட்டுப் போலீசார் காலில் சூட்டு பிடித்தனர் . ரோஹித் ராஜன் தாக்கியதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரோஹித் ராஜன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் விளக்கம்.
காலில் குண்டு காயமடைந்த ரோஹித் ராஜனை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகாலையிலேயே ரவுடி ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.