POCSO : கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் கைதான மதபோதகர்.. அதிரவைத்த குற்றம்..
17 வயது சிறுமியிடம் ஸ்டீபன் ராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டதால், ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத போதகரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் 17 வயது சிறுமி ஒருவர், தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்ற 53 வயதான நபர், மத போதகராக உள்ளார். இந்நிலையில் சிறுமி உள்ள பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஸ்டீபன் ராஜ் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஜெபம் செய்து வந்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஊர் ஊராகச் சென்று ஜெபம் செய்து வரும் ஸ்டீபன் ராஜ், நேற்று சிறுமி உள்ள பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் பாட்டி நேற்று இரு சிறுமிகளையும் வீட்டிற்குள் வைத்து தாழிட்டு விட்டு அருகே இருந்த கடைக்கு சென்றுள்ளார்.
சிறுமிகள் வீட்டில் இருப்பதையும், வீடு தாழிடப்பட்டு இருப்பதையும் நோட்டமிட்ட ஸ்டீபன்ராஜ் சிறுமியின் வீட்டின் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சிறுமியின் தங்கையை ஒரு அறையில் வைத்து ஸ்டீபன் ராஜ் தாழிட்டுள்ளார். பின்னர் 17 வயது சிறுமியிடம் ஸ்டீபன் ராஜ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டதால், ஸ்டீபன் ராஜ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து வீட்டிற்கு வந்த தனது பாட்டியிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மத போதகர் ஸ்டீபன் ராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டீபன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தினர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மதபோதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 6 விசாரணை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்