பொம்மையால் வந்த வினை! - தரையில் கிடந்ததை எடுத்துப்பார்த்த 3 சிறுவர்கள் பலி!
உயிரிழ்ந்த 3 பேரில் இரண்டு பேர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழ்ந்த 3 பேரில் இரண்டு பேர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. பன்னுவின் வாசிர் அருகே ஜானி கேல் பகுதியில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் மாநிலம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பள்ளிவாசலில் இருந்து சிறுவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது பீரங்கி குண்டு தரையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த சிறுவர்கள் பொம்மை என நினைத்து கையில் எடுத்து விளையாண்டுள்ளனர். அப்போது திடீரென அந்த குண்டு வெடித்து சிதறியுள்ளது. இதில் 2 சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பொம்மை என நினைத்து விளையாடி சிறுவர்கள் உயிரை விட்டது இது முதல்முறை. கடந்த சில காலங்களில் இதுபோல் பல பேர் உயிரிழந்தனர். இதுபோன்று ‘பொம்மை’ குண்டுகள் 1980-களில் சோவியத் படைகளால் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தங்கள் படையெடுப்பை எதிர்த்தவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக வீசப்பட்டன.
தலிபான் மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுடன் இராணுவம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போராடி வருகிறது. ஜூன் 2014-ல், அண்டை நாடான வடக்கு வஜிரிஸ்தானில், பழங்குடியினப் பகுதிகளில் உள்ள போராளித் தளங்களை அழிக்கவும், ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை இழந்த கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் இராணுவம் இந்த நடவடிக்கையைத் தொடங்கியது.