Cash seize Andhra Pradesh: போலீஸ் செய்த ரைடு.. அரசு பேருந்தில் சிக்கிய 9 கோடி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!
ஆந்திர பிரதேசத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அரசுபேருந்தில் கொண்டுவரப்பட்ட 1.9 கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அரசுபேருந்தில் கொண்டுவரப்பட்ட 1.9 கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜக்கய பேட்டை பகுதியில், தெலங்கனாவில் இருந்து காக்கிநாடா நோக்கி சென்ற அரசு பேருந்தை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது பேருந்தில் முறையற்ற ஆவணங்களின்றி 1.9 கோடி ரூபாய் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அந்தப்பணத்தை கைப்பற்றிய போலீசார், இது சம்பந்தமாக 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர் சோதனை
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மேற்கு கோதாவரியிலும் இதே போல முறையற்ற ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 4.76 கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றினர். வீராவள்ளி சோதனை சாவடியில் பேருந்தை சோதனை செய்த போது, இதனை போலீசார் கைப்பற்றினர். இதுதவிர குண்டூருலிருந்து விஜய்நகரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் இருந்தும், 350 கிராம் தங்கம் மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
View this post on Instagram
இதனையடுத்து பேருந்தில் இருந்த ட்ரைவர், நடத்துநர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களிடம் இருந்து முறையான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதே போல கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானா எல்லையில் உள்ள பஞ்சலிங்கலா என்ற இடத்தில் தனியார் பேருந்தில் இருந்து ரூ.1.25 கோடி ரொக்கத்தை ஆந்திர சிறப்பு அமலாக்கப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்