சித்துவை கொன்றுவிட்டு பீச்சில் கொண்டாட்டம்! கொலையாளிகளின் வைரல் ஃபோட்டோஸ்!
பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலைவை கொலை செய்த பின்னர் கொலையாளிகள் குஜராத் கடற்கரைக்குச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலைவை கொலை செய்த பின்னர் கொலையாளிகள் குஜராத் கடற்கரைக்குச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் புகைப்படங்களின் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சித்து மூஸ் வாலா கொலையாளிகள் மீது ஆயுதத் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
யார் இந்து சித்து மூஸ் வாலா?
28 வயது நிரம்பிய பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்து மூஸ்வாலா, தன் பாடல்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளால் பெரிதும் பேசப்பட்டவர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல சித்து மூஸ்வாலா, கடந்த மே.29ஆம் தேதி மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வைரலான ஃபோட்டோ:
இந்நிலையில் சித்துவின் கொலையாளிகள் கொலை செய்த வேகத்திலேயே குஜராத்திற்கு தப்பிச் சென்றனர். அங்கு அவர்கள் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சித்து மூஸ் வாலா வழக்கை விசாரித்த போலீஸார் 1850 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்:
பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை வழக்கில், லாரன்ஸ் பிஷ்னோய் என்பவரது கும்பல் முதலில் பொறுப்பேற்றதாகக் கூறப்பட்டது. கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி ப்ரார் குழுக்கள் இடையேயான கோஷ்டி மோதலே காரணம் என்றும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். எனினும் காவல் துறை விசாரணையில் அவர் கொலைக்கு பொறுப்பேற்க மறுத்ததாகவும், அகாலி தளம் கட்சியின் இளைஞரணித் தலைவர் விக்ரம ஜித் சிங் என்ற விக்கி மிட்டுகேராவைக் கொன்றதில் மூஸ் வாலாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்துவின் கொலை அதற்கான பழிவாங்கல் நடவடிக்கையே என பிஷ்னோய் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
சித்து மூஸ் வாலாவின் கொலையாளிகள் அனைவரும் ஷார்ட் சூட்டர்ஸ் எனப்படும் எந்த தொலைவில் இருந்து துல்லியமாக துப்பாக்கியால் இலக்கை குறிவைத்து தாக்குவதில் கைதேர்ந்தவர்கள். சித்து மூஸ் வாலாவை அப்படித்தான் இந்த ஷார்ப் சூட்டர்ஸ் துல்லியமாகக் குறிவைத்துக் கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் வெறும் 18 வயதே நிரம்பியர் என்றும் அடையாளம் காணப்பட்டது.
இருப்பினும் போலீஸார் லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார் என இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது. UAPA (Unlawful Activities Prevention Act) உபா என்றழைக்கப்படும் இந்தச் சட்டம் 1967ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.