மேலும் அறிய

Crime: ”என்னை நிர்வாணப்படுத்தி நகை போட்டு அழகு பாப்பாரு...” : ஃபைனான்சியர் சேகர் பற்றி மாடல் ஸ்வாதி அதிர்ச்சி தகவல்..

தன்னை நிர்வாணப்படுத்தி நகைகளை அணிவித்து ஃபைனான்சியர் மகிழ்ந்ததாக மாடல் அழகி விளக்கமளித்துள்ளார்.

சென்னை பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40), தொழிலதிபர். இவரது தம்பி ராஜேஷ் (37). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்தபோது அது மாயமாகியிருந்தது.

இதையடுத்து ராஜேஷின் மனைவி நகை, தமிழ்ச்செல்வியின் நகை 200 சவரன் நகையும், 5 தங்கக் கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி மாடல் சுவாதிக்கு கொடுத்திருந்தது தெரியவந்தது.


Crime: ”என்னை நிர்வாணப்படுத்தி நகை போட்டு அழகு பாப்பாரு...” : ஃபைனான்சியர் சேகர் பற்றி மாடல் ஸ்வாதி அதிர்ச்சி தகவல்..

 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், நாளடைவில் இவர்கள் உறவு வலுவடைந்துள்ளது. மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர் ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 30 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இதனையடுத்து சேகர் மற்றும் சுவாதியை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து மாடல் சுவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறினார். இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த மாடல் அழகி, ''எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன். நிர்வாணப்படுத்தி, நகைகளைப் போட்டு அழகு பார்ப்பார். சேகர் கொடுத்த 3 கார்களை ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன்.

எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவேயில்லை. பல முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. அப்போதுதான் சேகர் வந்து சிக்கினார். என்னுடன் ஜாலியாக பொழுதைக் கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. சேகர் கொடுத்த பணம், நகை எல்லாம் செலவாகிப்போச்சு” என்றார்.

உள்ளூரில் சுற்றியது மட்டுமின்றி கோவா, ஊட்டி போன்ற இடங்களுக்கும் சேகருடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்துள்ளார் சுவாதி. அதுமட்டுமின்றி தாய்லாந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சேகர் செய்துவிட்ட நிலையில் இருவரும் போலீசில் சிக்கியுள்ளனர்.


Crime: ”என்னை நிர்வாணப்படுத்தி நகை போட்டு அழகு பாப்பாரு...” : ஃபைனான்சியர் சேகர் பற்றி மாடல் ஸ்வாதி அதிர்ச்சி தகவல்..

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “சுவாதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்து சேகரை காதலித்து வருவதைப் போல் நடித்து வந்துள்ளார். சேகரிடம் பணம் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். சேகரும் பெண் மீது இருந்த காதல் மயக்கத்தால் பணம் மற்றும் நகையை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.

சுவாதியுடன் சேகர் சேர்ந்து கொண்டு அடிக்கடி கோவா, ஊட்டி ,கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சுவாதியிடம் சேகர் 200 சவரன் நகைகளை வீட்டிற்கு தெரியாமல் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சேகரின் தாய் ஸ்வாதியிடம் சண்டையிட்டு மீண்டும் அந்த நகைகளை மீட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் இப்படி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது என விசாரணையில் தெரிய வந்தது” என  காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget