மாயமான வாலிபர் தலை துண்டிப்பு.. வாலிபர் உடலை எரித்த 3 பேர் கைது
வந்தவாசி பகுதியில் மளிகைக் கடைக்காரர் மகனின் தலையை துண்டித்து கொலைசெய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது.இது தொடர்பாக 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி பகுதியில் மளிகைக் கடைக்காரர் மகனின் தலையை துண்டித்து கொலைசெய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள குளத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தெள்ளார் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று ஆங்காங்கே கிடந்த எலும்புக்கூடுகளை சேகரித்தனர்.
மேலும் அங்கு இருந்த கடை சாவி மற்றும் இருசக்கர வாகன சாவி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்தவர் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் வயது (22) என்பதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது.
மேலும் இந்த விசாரணையில் மளிகை கடையை தினந்தோறும் இரவு நேரத்தில் விஜய் மூடிவிட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி விஜய் கடையை மூடிவிட்டு காணமல் போன அன்றில் இருந்து விஜயின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அவருடை தொலைபேசி எஸ்.நாவல்பாக்கம் பகுதியில் உள்ள முருகன் கோவில் பின்புறத்தில் செயல் பட்டதை காண்பித்து உள்ளது.
அப்போது பலரின் செல்போன் செயல்பட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் 3 நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் 3 நபர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விஜய்க்கும் அவர்கள் மூவருக்கும் கொடுக்கல்-வாங்கல் தகராறில் விஜய்யை எரித்து கொலை செய்துவிட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர்.
மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நல்லூரில் மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில்; விஜயின் தலையை துண்டாக்கி கொன்று உள்ளனர்.மேலும் விஜயின் சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகியிருந்தது. மேலும் உடலில் இருந்து கைபாகங்கள் மட்டும் இருந்தது விஜயின் செருப்பு தனியாக கிடந்துள்ளது. விஜயை கொலை செய்து உடலை எரித்த மர்ம நபர்கள் அவரின் பைக்கை அருகில் உள்ள என் ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.