மேலும் அறிய

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 45 வயதான நிலையில், சில மாதங்களுக்கு முன் 25 வயதான பிரகாஷூடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

குஜராத்தில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது ஒரு திட்டமிட்ட கொலை என போலீசார் கண்டறிந்துள்ளனர். 

குஜராத் மாநில ராஜ்கோட்டில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ரயில் தண்டவாளங்களுக்கு அருகே பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் நினைத்தனர். ஆனால் அப்பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை ராஜ்கோட் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவர்களும் காயங்கள் தான் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அருகிலுள்ள கோண்டல் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் அந்தப் பெண் ஒரு இளைஞனுடன் வருவதைக் கண்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் பிரகாஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடன் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 45 வயதான நிலையில், சில மாதங்களுக்கு முன் 25 வயதான பிரகாஷூடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உடலுறவில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அந்த பெண் பிரகாஷை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதற்கு வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி அந்த பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ள பிரகாஷ் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இதனால் அந்த இளைஞரும் சம்மதிக்காமல் தவிர்த்துள்ளார். 

ஆனால் அப்பெண் தொடர்ச்சியாக வற்புறுத்த ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் பிரகாஷ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனிமையில் நேரம் செலவழிக்கும் பொருட்டு அந்த பெண்ணை தண்டவாளம் பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது ரயில் வரவும் தண்டவாளத்தை விலகுமாறு அப்பெண்ணை எச்சரிப்பது போல நடித்து அருகில் வந்ததும் தள்ளி விட்டு அதனை தற்கொலை நாடகம் போல காட்டியுள்ளார். எனினும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரகாஷ் சிக்கினார்.

Also Read: அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கைப்பையை பிரகாஷ் எடுக்காமல் அங்கேயே விட்டுச்சென்றது போலீசாருக்கு எளிதாக வழக்கை முடிக்க உதவியுள்ளது. அப்பெண்  தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததையும், அவர்களுக்கு இரண்டு மகன்,மகள்கள் இருப்பதும் தெரிய வந்தது. அப்பெண் கேட்டரிங் சேவையில் சமையல் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரகாஷை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget