மேலும் அறிய

டெல்டா மாவட்டங்களில் தொடர் டிராக்டர் திருட்டு - குற்றவாளியை தட்டி தூக்கிய மயிலாடுதுறை காவல்துறை..!

மழை வெள்ளப் பாதி, தண்ணீர் பற்றாக்குறை, மேட்டூர் நீர்வரத்து குறைவு என பல்வேறு இன்னலுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் திருட்டும் சேர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி மாற்றியது.

டெல்டா மாவட்டங்களில் தொடர் டிராக்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதிகரிக்கும் டிராக்டர் திருட்டு

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்திற்கு முக்கிய உபகரணமான டிராக்டர் இந்த மாவட்டங்களில் அவ்வப்போது திருடுப்போய் வந்தன. இதனால் மழை வெள்ளப் பாதி, தண்ணீர் பற்றாக்குறை, மேட்டூர் நீர்வரத்து குறைவு என பல்வேறு இன்னலுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் திருட்டும் சேர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி மாற்றியது.

டெல்டா மாவட்டங்களில் தொடர் டிராக்டர் திருட்டு - குற்றவாளியை தட்டி தூக்கிய மயிலாடுதுறை காவல்துறை..!

மயிலாடுதுறையில் காணாமல் போன டிராக்டர் 

மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவாகி வந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது‌. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் சேர்ந்தவர் முருகன். விவசாயான இவர் மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரில் கட்டிடங்கள் கட்டுவதற்கான ஜல்லி, மணல், எம்.சண்ட் உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.

UGC NET 2024: ஆசிரியர் தேர்வர்களே மறந்துடாதீங்க… யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!

டெல்டா மாவட்டங்களில் தொடர் டிராக்டர் திருட்டு - குற்றவாளியை தட்டி தூக்கிய மயிலாடுதுறை காவல்துறை..!

காவல்நிலையத்தில் புகார் 

விவசாய பணிகள் போக மீதம் உள்ள நேரங்களில் தனது டிராக்டரை கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் நவம்பர் 28 -ம் தேதி இரவு தனது டிராக்டரை மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரில் உள்ள தனது அலுவலகத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவருடைய டிராக்டர் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அக்கம் பக்கத்தில் விசாத்த முருகன் தனது டிராக்டர் திருடுபோனதை உணர்ந்து, உடனடியாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

UAE Job Offer: இந்த தொழில் தெரியுமா? ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் - தமிழக அரசு அறிவிப்பு

குற்றவாளி கைது

முருகனின் புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் டிராக்டர் காணாமல் போன இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் 39 வயதான வினோத் மற்றும் அவரது நண்பன் இருவரும் கூட்டாக இணைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஒருவருக்கு வலைவீச்சு 

அதனைத் தொடர்ந்து திருச்சி அருகே பதுங்கி இருந்த வினோத்தை மடக்கி பிடித்து, திருபோன டிராக்டர் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்தி இருசக்கர வானகத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் திருட்டு ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர் மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டிராக்டர் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Embed widget